ஓடிடி தகவல்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‘கில்லாடி ஜோடிஸ்’

ஜன. 25 முதல் ஒளிபரப்பாகிறது

செய்திப்பிரிவு

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சில வருடங்களுக்கு முன் வெளியாகி வரவேற்பைப் பெற்ற ரியாலிட்டி ஷோ, ‘மிஸ்டர் அண்ட் மிஸஸ் கில்லாடிஸ்’. 2 சீசன்கள் மட்டுமே வெளியான இந்நிகழ்ச்சி பிறகு ஒளிபரப்பாகவில்லை. இந்நிலையில் இதே நிகழ்ச்சி “கில்லாடி ஜோடிஸ்” என்ற பெயரில் மீண்டும் வருகிறது. அதிரடி சாகசங்கள் நிறைந்த இந்த நிகழ்ச்சி ஜன. 25 முதல், ஞாயிறு தோறும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது.

இதில் சின்னத்திரை, வெள்ளித்திரை மற்றும் சமூக வலைதளங்களைச் சேர்ந்த ரீல் மற்றும் ரியல் ஜோடிகள் பங்கேற்க உள்ளனர். அவர்களின் வலிமை, மன உறுதி மற்றும் ஒருவருக்கொருவர் காட்டும் ஒத்துழைப்பைச் சோதிக்கும் வகையில் சவால்கள் காத்திருக்கின்றன. காடு, நீர், நெருப்பு, மலை என நான்கு கடினமான நிலப்பரப்புகளில் அமைக்கப்பட்டுள்ள சவால்களைத் தம்பதிகள் எதிர்கொள்ளும் போது, அவர்களின் அன்பும் துணிச்சலும் ஒருங்கே வெளிப்படும். இந்த சீசன் மூலம் தொகுப்பாளர் சஞ்சீவ் வெங்கட், 8 ஆண்டுகளுக்குப் பிறகு சின்னத்திரைக்குத் திரும்புகிறார்.

சர்வதேசத் தரத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த சீசன், இலங்கை, வியட்நாம், தாய்லாந்து, மாலத்தீவுகள் போன்ற வெளிநாடுகளில் படமாக்கப்பட உள்ளது.

          
SCROLL FOR NEXT