ஓடிடி தகவல்

ஜேசன் சஞ்சயின் ‘சிக்மா’ அக்.30-ல் ஓடிடியில் ரிலீஸ்

ப்ரியா

ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமான ‘சிக்மா’ படம் அக்டோபர் 30-ம் தேதி ஓடிடியில் வெளியாவதாக தகவல் வெளியாகி உள்ளது.

முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பில் வெளியான படம் ‘சிக்மா’. சந்தீப் கிஷன் நாயகனாக நடித்திருக்கும் இந்தப் படத்தில் அவருடன், ஃபரியா அப்​துல்​லா, ராஜு சுந்​தரம், அன்​பு​தாசன், யோக் ஜேபி, சம்பத் ராஜ், கிரண் கொண்​டா, மகாலட்​சுமி சுதர்​சனன்  உள்ளிட்டோர்  நடித்திருந்தனர். கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவும், பிரவீன் கே.எல்.படத்தொகுப்பு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு தமன்  இசையமைத்திருந்தார்.

நிதி நெருக்கடியில் தவிக்கும் குரு (சந்தீப் கிஷன்), மறைந்த தனது தாயின் நினைவாக இயங்கி வரும் நலிவடைந்த நூலகத்தைப் பராமரித்து வருகிறார். உள்ளூர் தாதாவுக்குப் பெரிய தொகையைக் கடனாகத் திருப்பிக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் அவர், தன் ஆடியோ புக்ஸ் யூடியூப் சேனல் மற்றும் ஏஐ குரல் முயற்சிகள் மூலம் அதிலிருந்து மீளப் போராடுகிறார்.

ஆர்.ஜே சாம் (ஃபரியா அப்துல்லா) தன் தந்தையின் பழங்காலப் பொருட்கள் விற்கும் கடை வருமானம் தராததால் குருவைப் போலவே பணத் தேவையில் இருக்கிறார்.

இவர்களுடன் குருவின் நண்பர்களான டாக்டர் நீல் (ராஜு சுந்தரம்), கவிதை கணேஷ் (அன்பு தாசன்) ஆகியோர் இணைகிறார்கள். இன்னொரு புறம் பெரும் பணக்காரரான கோட்லபாடி வீரா ரெட்டி (சம்பத் ராஜ்), போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் வின்சென்ட் (ஷிவ் பண்டிட்) ஆகியோர். ஹீரோவின் குழு வில்லன்களின் பாதையில் குறுக்கிடும்போது சில சம்பவங்கள் நடக்கின்றன. இதன் பிறகு என்ன ஆகிறது என்பதே ‘சிக்மா’ படத்தின் கதை.

அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘சிக்மா’ தற்போது ஓடிடியில் வெளியாக இருக்கிறது. இந்தப் படம் அக்டோபர் 30-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது. இந்தப் படம் இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் காணக் கிடைக்கும்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT