ஓடிடி தகவல்

நெட்​பிளிக்ஸின் டாப் 10 பட்டியலில் ‘ஜி.டி.என்.’

நிலா

ஜி.டி.​நா​யுடு​வின் வாழ்க்​கைக் கதை ‘ஜி.டி.என்’ என்ற பெயரில் திரைப்பட​மாகி உள்​ளது. மாதவன், சத்​ய​ராஜ், ஜெய​ராம், பிரியாமணி, துஷாரா விஜயன், தம்பி ராமையா உள்​பட பலர் நடித்துள்ள இப்​படத்தை கிருஷ்ணகு​மார் ராம்​கு​மார் இயக்கியிருக்கிறார்.

ஆக.7-ம் தேதி திரையரங்​கு​களில் வெளி​யான இத்திரைப்​படம், விமர்​சகர்​களின் பாராட்​டைப் பெற்​றது. செப். 4-ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்​தில் வெளி​யானது. இப்​படம், நெட்பிளிக்ஸில் உலகளா​விய டாப் 10 திரைப்​படங்​களின் பட்டியலில் இடம்​பிடித்​துள்​ளது.

வெளி​நாடு​களில் வசிக்​கும் இந்​தி​யர்​களிட​மும், உலகெங்​கிலும் உள்ள ரசிகர்​களிட​மும் இப்​படம் சிறப்​பான வரவேற்​பைப் பெற்று வரு​கிறது. தற்​போது ஐக்​கிய அரபு அமீரகம், இலங்​கை, சிங்​கப்​பூர், பாகிஸ்​தான் மற்​றும் பஹ்ரைன் உள்​ளிட்ட பல நாடு​களில் டாப் 5 தரவரிசைக்​குள் இப்படம் இடம்​பெற்​று உள்​ளது.

SCROLL FOR NEXT