அலியா பட் நடிப்பில் வெளிவந்த ‘ஆல்பா’ படம் ஆகஸ்ட் 28-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.
இந்தத் தகவலை நெட் ஃப்ளிக்ஸ் இந்தியா அதன் எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில், ‘ஆல்பா கேங்குடன் இணைந்து கொள்ள தயாராகுங்கள்’ என்று கூறி, ஓடிடியில் படம் வெளியாகும் தேதியைத் தெரிவித்துள்ளது.
ஸ்பை அதிரடி வகை திரைப்படமான இதில் அலியா பட், ஷர்வாரி உடன் அனில் கபூர், பாபி தியோல், திபியேந்து பட்டாச்சாரியா, விஷால் கட்பால் உள்ளிட்டேர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஹிர்த்திக் ரோஷன் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.
யஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரித்து இருக்கும் படத்தை ஷிவ் ரவைல் இயக்கி உள்ளார். ரோஹன்ஷ் மற்றும் அபீர் பண்டிட் பாடல்களுக்கு இசை அமைத்திருக்கும் இந்தப் படத்துக்கு சஞ்சித் மற்றும் அங்கித் பல்ஹாரா பின்னணி இசை அமைத்துள்ளனர். ‘ஆல்பா’ படம் ஜூலை 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.