செப்.6 முதல் பிக்பாஸ் தமிழ் சீசன் 10

செப்.6 முதல் பிக்பாஸ் தமிழ் சீசன் 10
Updated on
1 min read

தமிழ் சின்​னத்​திரை​யின் பிரபல​மான நிகழ்ச்சி ‘பிக்பாஸ்’. ஏராளமானோர் விரும்​பும் இந்​நிகழ்ச்சி ஒவ்​வொரு ஆண்​டும் வரவேற்​பைப் பெற்று வரு​கிறது. இந்​நிலை​யில், இதன் 10-வது சீசன், செப். 6-ம் தேதி மாலை 6 மணி முதல் தொடங்க உள்​ளது. ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்​தி​லும், ஸ்டார் விஜய் தொலைக்காட்​சி​யிலும் ஒரே நேரத்​தில் நேரலை​யாக ஒளிபரப்பாகிறது.

மேலும், பிக்​பாஸ் வீட்​டில் நடக்​கும் அனைத்து சுவாரஸ்ய நிகழ்ச்சிகளை​யும் ரசிகர்​கள் 24 மணி நேர​மும் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்​தில் நேரடி​யாகப் பார்க்​கும் வசதி​யும் செய்யப்பட்​டுள்​ளது.

இந்த 10-வது சீசனை முன்​னிட்டு வெளி​யிடப்​பட்ட ‘கார்​னி​ விழா’ விளம்​பரப் படம் சமூக வலைதளங்​களில் வைரலாகி உள்​ளது. இந்த சீசனின் தொடக்​கத் தேதியை அறிவிக்கும் வகை​யில், விஜய் சேதுபதி இடம்​பெற்​றுள்ள ‘ஒட்​டிக்​கிச்​சு’ என்ற சிறப்​புக் பாடலும் வெளி​யிடப்​பட்​டுள்​ளது.

இம்​முறை பொது​மக்​களில் இருந்து தேர்ந்​தெடுக்​கப்​பட்ட போட்டியாளர்​களும் பிக்​பாஸ் வீட்​டுக்​குள் செல்​கின்​றனர். இதற்​காக நடத்தப்​பட்ட ‘பிக்​பாஸ்: தி காமன் மேன்’ வெற்​றி​யாளர்கள், போட்டி​யாளர்​களு​டன் இடம்​பெறு​வார்​கள். விஜய் சேதுபதி இந்நிகழ்ச்​சியை 2-வது ஆண்​டாகத் தொகுத்து வழங்க இருக்கிறார்.

செப்.6 முதல் பிக்பாஸ் தமிழ் சீசன் 10
TOXIC: விமர்சனம் - தெறிக்க ஓடவிடும் துன்பியல் சம்பவம்!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in