ஓடிடி தகவல்

வெப் தொடரில் நடிக்கிறார் நடிகை ஸ்ருதி ஹாசன்

ப்ரியா

இந்தி நடிகை அனன்யா பாண்டே நடித்து அமே​சான் பிரைம் வீடியோ​வில் வெளி​யான வெப் தொடர், ‘கால் மீ பே’ (Call Me Bae). காமெடி டிராமா தொட​ரான இதை காலின் டி ’குன்ஹா இயக்கி இருந்​தார். வீர் தாஸ், குர்​பாதே பிர்​ஸா​டா, வருண் சூட், விஹான் சமத் என பலர் நடித்​தனர். கடந்த 2024-ம் ஆண்டு வெளி​யாகி வரவேற்​பைப் பெற்ற இத்​தொடரின் அடுத்த சீசன் இப்​போது உரு​வாகிறது. முதல் பாகத்​தில் நடித்​தவர்​கள் இதி​லும் நடிக்​கின்​றனர். இதில் நடிகை ஸ்ரு​திஹாசன் புதி​தாக இணைந்​துள்​ளார்.

அவர் முக்​கிய கதா​பாத்​திரத்​தில் நடிக்க இருப்​ப​தாகக் கூறப்​படு​கிறது. அவர் தொடர்​பான காட்​சிகள் சமீபத்​தில் ராஜஸ்​தானில் படமாக்​கப்​பட்​டன. ஸ்ருதி கவர்ச்​சி​யுடன் கூடிய ஸ்டைலான கதா​பாத்​திரத்​தில் நடிக்க இருப்​ப​தாக​வும் அவருடைய கேரக்​டரை கண்டு பார்​வை​யாளர்​கள் நிச்​ச​யம் ஆச்​சரியப்படு​வார்​கள் என்​றும் இத்​தொடரின் குழு​வினர் தெரி​வித்​துள்​ளனர். முந்​தைய பாகத்தை விட கூடு​தல் திருப்​பங்​கள் மற்​றும் நகைச்​சுவை​யுடன் இத்​தொடர் உரு​வாக இருக்​கிறது.

          
SCROLL FOR NEXT