ஓடிடி தகவல்

மறதியும், விறுவிறுப்பும்! - பங்கஜ் திரிபாதியின் ‘கடக் சிங்’ ட்ரெய்லர் எப்படி?

செய்திப்பிரிவு

பங்கஜ் திரிபாதி, பார்வதி நடித்துள்ள ‘கடக் சிங்’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

தேசிய விருது வென்ற இயக்குநர் அனிருத்தா ராய் சௌத்ரி இயக்கத்தில், பங்கஜ் த்ரிபாதி, பார்வதி திருவோது, சஞ்சனா சாங்கி மற்றும் ஜெயா அஹ்சான் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘கடக் சிங்’. இப்படத்தின் ட்ரெய்லர் கோவாவில் நடைபெற்று வரும் 54வது சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. படம் வரும் டிசம்பர் 8-ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியிடப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

ட்ரெய்லர் எப்படி?: மறதி நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபடுகிறார் பங்கஜ் திரிபாதி. பாதி நினைவுகளுடன் அவரின் வாழ்க்கை பயணம் விவரிக்கப்படுகிறது. மேலும் அவர் பணிபுரியும் அலுவலகத்தில் நடந்த ஊழல் குற்றத்துக்கு பின்னால் இருக்கும் உண்மையை கண்டறிய முற்படுகிறார். இதனிடையே உறவுகள் குறித்தும் படம் பேசுவதை ட்ரெய்லர் உறுதி செய்கிறது. ட்ரெய்லர் ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது.

SCROLL FOR NEXT