சிறப்புக் கட்டுரைகள்

மருத்​து​வர் ராம​தாஸ் பயோபிக் நின்​றது ஏன்? - இயக்குநர் சேரன் விளக்​கம்

நிலா

‘வெங்​கா​யம்’, ‘பயாஸ்​கோப்’ ஆகிய படங்​களை இயக்​கி, நடித்த சங்​ககிரி ராஜ்கு​மார், கதை​யின் நாயக​னாக​வும் பல்​வேறு கதா​பாத்​திரங்​களி​லும் நடித்​துள்ள படம், ‘ஒன் மேன்’. ஒரு திரைப்படத்தின் உரு​வாக்​கத்​துக்​குத் தேவை​யான பல்​வேறு பணி​களைத் தானே மேற்​கொண்​டு, இது​வரை யாரும் மேற்​கொள்​ளாத வகையில் இப்​படத்தை உரு​வாக்​கி​யுள்​ளார்.

ஆக. 21-ல் வெளி​யாகும் இப்​படத்​தின் செய்​தி​யாளர்​கள் சந்​திப்பு சென்​னை​யில் நடை​பெற்​றது. விழா​வில் இயக்குநர் சேரன், நடிகர் சத்​ய​ராஜ் உள்பட பலர் பங்​கேற்​றனர் இயக்​குநர் சேரன் பேசும் போது, "மருத்​து​வர் ராம​தாஸ் வாழ்க்கை கதையை இயக்க இருந்ததற்கு முன்​பு, அதை இயக்க இருந்​தவர் சங்​ககிரிராஜ்குமார்.

சில காரணங்​களால் அவர் இயக்க முடிய​வில்​லை. என்னை அணுகிய போது நெருடலாக இருந்​தது. ராஜ்கு​மாரிடம், ‘ராம​தாஸ் ஐயா என்​னிடம் சொல்​லும் போது மறுக்க முடிய​வில்​லை’ என்று சொல்​லி​விட்டு படத்​தின் பணியை தொடர்ந்​தேன். ஆனால் இப்​போது படம் நின்​று​விட்​டது. எங்​களின் ஒன்​றரை வருட உழைப்பு வீணாகி​விட்​டது. படம் வராததற்கு அப்​பா-மகன் சண்​டை​தான் காரணம். இப்​போது சேர்ந்து விட்​டார்​கள், படம் எடுக்க ஆள் இல்​லை. இது​தான் சினி​மா.

இயக்​குநர் சங்​ககிரி ராஜ்கு​மார், சினி​மா​வில் சம்​பா​திப்​ப​தற்​காக வரவில்​லை. சாமானியனும் சினி​மாவை உரு​வாக்க முடி​யும்; சாமானியர்​களிடமும் சினி​மாவைக் கொண்​டு​போய்ச் சேர்க்க வேண்​டும். சாமானியர்​களை​யும் சினி​மா​வில் பயன்​படுத்த முடி​யும் என்ற கர்​வம்​மிக்க சிந்​தனை அவருக்கு உண்​டு. இந்த ‘ஒன் மேன்’ திரைப்​படத்​தில் அனைத்து விஷ​யங்​களை​யும் அவர் மட்​டுமே செய்​திருக்​கிறார். இத்​தகைய புது​மை​யான முயற்​சிக்​காகவே அவரை பாராட்ட வேண்​டும்” என்​றார்.

SCROLL FOR NEXT