இலக்கியம்

​வாலி விருது | திண்ணை

செய்திப்பிரிவு

திரைப்​படப் பாடலாசிரியரும் கவிஞரு​மான வாலி​யின் பிறந்​த​நாளை முன்​னிட்டு ஆண்​டு​ தோறும் வாலி பதிப்​பகம் சார்​பில், ‘வாலி விருது’ வழங்​கப்​பட்டு வரு​கிறது. கவிஞர் ஒரு​வருக்​கும் எழுத்​தாளர் ஒரு​வருக்​கும் வழங்​கப்​படும் இந்த விருது தலா ரூ.50 ஆயிரம் விருதுத் தொகை​யும், பொற்​கிழி​யும் கொண்​டது.

2026ஆம் ஆண்​டுக்​கான வாலி விருதுக்கு கவிஞர் அறி​வும​தி​யும், திரைப்பட ஆய்​வாளர் திருநின்​றவூர் சந்​தான கிருஷ்ணனும் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளனர். அக்​டோபர் 31ஆம் தேதி சேலத்​தில் நடை​பெறும் விழா​வில், மலேசிய மேனாள் அமைச்​சர் டத்தோ சரவணன் விருதுகளை வழங்​கு​கிறார்.

அழ. வள்​ளியப்பா இலக்​கியப் போட்டி:

வள்​ளியப்பா இலக்​கிய வட்​டம் சார்​பில் குழந்தை இலக்​கியப் போட்​டிகள் அறிவிக்​கப்​பட்​டுள்​ளன. இதுகுறித்து வெளி​யிடப்​பட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில், 2024-2025ஆம் ஆண்​டு​களில் வெளி​யான குழந்​தைகளுக்​கான சிறந்த பாடல் நூல் ஒன்​றுக்கு வள்​ளியப்பா இலக்​கிய விருதும் ரூ.10 ஆயிரம் ரொக்​கப்​ பரிசும் வழங்​கப்​படும்.

மேலும், பள்ளி மாணவர்​களுக்​கான சிறு​வர் பாடல் போட்டி நடத்​தப்​படு​கின்​றது. இதில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்​கள் பங்கு பெறலாம்.

முதல் பரி​சாக ரூ.3000, இரண்​டாம் பரி​சாக ரூ.2000, மூன்​றாகம் பரி​சாக ரூ.1000 வழங்​கப்​படும். போட்​டிகளுக்கு எழுத்​தாளர்​கள் தங்​கள் நூல்​களின் மூன்று பிர​தி​களை​யும், பள்ளி மாணவர்​கள் சிறு​வர் பாடல்​களை​யும் தேவி நாச்​சி​யப்​பன், குழந்​தைக் கவிஞர் இல்​லம், 3/628. 9ஆம் வீதி வடக்கு விரிவு, சுப்​பிரமணி​யபுரம், காரைக்​குடி 630003 என்ற முகவரிக்​கு, இம்​மாதம் 16ஆம் தேதிக்​குள் அனுப்​பிவைக்​க வேண்​டும்​ என்​று தெரிவிக்​கப்​பட்​டுள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT