இலக்கியம்

விருதுகள் விழா | திண்ணை

செய்திப்பிரிவு

மானுட மேன்மைகளை அடுத்த தலைமுறைக்கு அடையாளம் காட்டும் விதமாக ஆண்டுதோறும் ‘தஞ்சை நல்லூர் முற்றம் விருதுகள்’ வழங்கப்படுகின்றன. அந்தவகையில், 2026ஆம் ஆண்டுக்கான விருதுகள் விழா இன்று (சனிக்கிழமை) மாலை 6.10 மணிக்கு தஞ்சையில் உள்ள பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கில் நடைபெறுகிறது.

பேராசிரியர் கோ.விஜயராமலிங்கம் தலைமையில் நடைபெறும் நிகழ்வில் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இலக்கிய விருதைப் பேராசிரியர் சோ.ந.கந்தசாமி, தஞ்சை நல்லூர் முற்ற செயலூக்க விருதைப் பேராசிரியர் இரா.முரளி, மானுடநேயமருத்துவர் ப.பாஸ்கரன் நினைவு படைப்பூக்க விருதைஎழுத்தாளர் இரா.மோகன்ராஜன் ஆகியோர் பெறுகின்றனர். முனைவர் வெ.திருப்புகழ் விழாப் பேருரை ஆற்றுகிறார்.

ஒருநாள் திறனாய்வுக் கருத்தரங்கம்: எழுத்தாளர் செ.ஏக்நாத்ராஜ் எழுதிய ‘சடவு’ நூல் குறித்து பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கம் மற்றும் பாளையங்கோட்டை ‘மேலும்’ வெளியீட்டகம் இணைந்து நடத்தும் ஒரு நாள் திறனாய்வுக் கருத்தரங்கம் அக்டோபர் 12 காலை 10 மணிக்கு திருவள்ளுவர் கல்லூரிவளாகத்தில் நடைபெறுகிறது. முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் இரா.உமாமகேஷ்வரி தலைமையிலான கருத்தரங்கில், க.தெட்சணாமூர்த்தி சிறப்புரையும், எழுத்தாளர் செ.ஏக்நாத்ராஜ் ஏற்புரையும் ஆற்றுகின்றனர்.

SCROLL FOR NEXT