

காக்கைச் சிறகினிலே அக்டோபர் 2026 இதழ் வெளியாகியிருக்கிறது. தீவிரமான அரசியல் கட்டுரைகளுடன் நடப்புச் சூழலோடு தொடர்புடைய ஆய்வுக் கட்டுரைகளும் இவ்விதழில் இடம்பெற்றுள்ளன.
வீரமாமுனிவர் தொகுத்த தமிழ் - பிரெஞ்சு அகராதிச் சுவடியில் அவர் எழுதிய முகவுரையை முன்வைத்திருக்கிறார் பேராசிரியர் எஸ்.ஜெயசீல ஸ்டீபன். கல்வி உரிமைச் சட்டம் (2010) நடைமுறைப்படுத்தப்பட்டு 16 ஆண்டுகளான நிலையிலும், இந்தியாவின் கல்வி நிலை எவ்வளவு பின்னடைவைச் சந்தித்துள்ளது என்பதை விவரித்திருக்கிறார் எழுத்தாளர் நிகழ் அய்க்கண். தேர்தல் ஆணையத்தின் எஸ்.ஐ.ஆர் நடிவடிக்கையால் வாக்குரிமையை இழந்தவர்களின் பின்னணியை கர்நாடக மாநிலத்தின் தரவுகளைக் கொண்டு ஆராய்ந்திருக்கிறார் ஷிவசுந்தர்.
மார்க்சிய அறிஞர் டேவிட் ஹார்வேயின் கோட்பாட்டை விரிவாக எடுத்துரைத்துள்ளார் பேராசிரியர் இரா.முரளி. இலங்கையின் காலனிய வரலாற்றில் அதிகம் அறியப்படாத ஸ்பெயினின் ஆதிக்கம் பற்றி விவரித்துள்ளார் எழுத்தாளர் என்.சரவணன். இதுபோன்ற தீவிர விவாதங்களை முன்வைக்கும் கட்டுரைகளோடு ச.மருதுதுரையின் சிறுகதையும், சி.நாராயண ரெட்டியின் கவிதையும் இவ்விதழில் இடம்பெற்றுள்ளன.
காக்கைச் சிறகினிலே
ஆசிரியர்: வி.முத்தையா
விலை: ரூ.50
தொடர்புக்கு: 98414 57503