கோப்புப் படம்

 
இலக்கியம்

எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் உட்பட 24 பேருக்கு சாகித்ய அகாடமி விருது

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ‘தமிழ் சிறுகதைகளின் தடங்​கள்’ என்ற நூலுக்​காக எழுத்​தாளர் ச.தமிழ்ச்செல்​வனுக்கு 2025-ம் ஆண்​டுக்​கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்​கப்​பட்டுள்​ளது.

கடந்த 1954-ம் ஆண்​டில் மத்​திய அரசு சார்​பில் சாகித்ய அகாடமி நிறு​வப்​பட்​டது. இந்த அமைப்பு சார்​பில் இந்​தி​யா​வின் அதி​காரப்​பூர்​வ​மான 24 மொழிகளில் சிறந்த கவிதை, நாவல், சிறுகதை, இலக்​கிய ஆய்​வு​களுக்கு ஆண்​டு​தோறும் சாகித்யஅகாடமி விருது வழங்​கப்​படு​கிறது. இது, இலக்​கி​யத்​துக்​கான உயரிய விரு​தாக திகழ்​கிறது.

          

இந்நிலையில், 2025-ம் ஆண்​டுக்​கான சாகித்ய அகாடமி விருதுகள் நேற்று அறிவிக்கப்​பட்​டன.இதில், ‘தமிழ் சிறுகதைகளின் தடங்​கள்’ என்ற நூலுக்​காக எழுத்​தாளர் ச.தமிழ்ச்செல்​வனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்​கப்​பட்டுள்​ளது. எட்டு கவிதை தொகுப்​பு​கள், 4 நாவல்​கள், 6 சிறுகதைகள், 2 கட்​டுரைகள், 2 நினை​வுக் குறிப்​பு​கள், ஒரு இலக்​கிய விமர்​சனம், ஒரு சுயசரிதை ஆகியவை சாகித்ய அகாடமி விருதை பெற்​றுள்​ளன.

குறிப்​பாக, தெலுங்கு எழுத்​தாளர் நந்​தினி சித்தா ரெட்​டி, மலை​யாள எழுத்​தாளர் பிர​பாகரன், கன்னட எழுத்​தாளர் அமரேஷ் நுகடோனி, இந்தி எழுத்​தாளர் மம்தா காலியா உட்பட மொத்​தம் 24 பேர் சாகித்ய அகாடமி விருதை வென்​றுள்​ளனர். அவர்​களுக்கு செப்பு பட்​ட​யம், பொன்​னாடை, ரூ.1 லட்சம் ரொக்​கப் பரிசு ஆகியவை வழங்​கப்பட உள்​ளன.

கல்லூரி காலத்தில் இருந்தே.. கடந்த 1954-ம் ஆண்டு மே மாதம் 27-ம் தேதி தூத்​துக்​குடி மாவட்​டம் நாகலாபுரத்​தில் சண்​முகம், சரஸ்​வதி தம்​ப​தி​க்கு மகனாக தமிழ்ச் செல்​வன் பிறந்​தார். விருதுநகர் மாவட்​டம் நென்​மேனி மேட்​டுப்​பட்​டி​யில் பள்​ளிப்​படிப்பையும், கோவில்​பட்​டி​யில் கல்​லூரி படிப்பையும் நிறைவு செய்​தார். அஞ்​சல் துறை மற்​றும் ராணுவத்​தில் பணி​யாற்​றிய அவர், கல்​லூரி காலத்​தில் இருந்தே எழுதி வரு​கிறார்.

இவரது முதல் கவிதை​யான ‘ஒரு நாள் டைரி’ கடந்த 1972-ம் ஆண்​டில் வெளி​யானது. இவரது ‘வெ​யிலோடு போய்’ எனும் சிறுகதை, தமிழில் வெளிவந்த சிறுகதைகளில் குறிப்​பிடத்​தக்க ஒன்​றாகும். இந்த கதையை அடிப்படை​யாகக் கொண்டு ‘பூ’ என்ற திரைப்​படம் வெளி​யானது. இந்த திரைப்​படத்​துக்​காக தமிழக அரசு கடந்த 2008-ம் ஆண்​டுக்​கான சிறந்த கதாசிரியர் விருதை தமிழ்ச்செல்வனுக்கு வழங்கியது. ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் ‘எசப்​பாட்​டு’ என்ற தொடரைதமிழ்ச்செல்வன் எழுதி உள்​ளார். மேலும் பல்​வேறு கட்​டுரைகளை​யும்​ அவர்​ எழுதியிருக்​கிறார்​.

SCROLL FOR NEXT