வாழ்வியல்

வெளிநாட்டு சுற்றுலா பயணிக்கு உதவிய ரேபிடோ பெண் டிரைவர்!

செய்திப்பிரிவு

பானாஜி: கோவா மாநிலத்துக்கு வெளிநாட்டு பெண் ஒருவர் தனியாக சுற்றுலா வந்தார். அவர் அங்குள்ள கோக்கநட் என்ற விடுதியில் தங்கினார்.

அவர் கடற்கரை உட்பட பல இடங்களுக்கு நடந்து சென்றார். மாலை நேரத்தில் கடற்கரைக்கு சென்ற அவர், இரவு நேரம் ஆனதும் கூகுள் மேப் உதவியுடன் விடுதியை நோக்கிப் புறப்பட்டார். அப்போதுதான் அவர் தவறான வழியில் சென்று விட்டோம் என்பதை அறிந்து சாலையில் திகைத்து நின்றார்.

அப்போது அந்த வழியாக ரேபிடோ பெண் டிரைவர் சிந்து குமாரி வந்தார். சாலையில் தனியாக பதற்றத்துடன் நின்றிருந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணியிடம் உதவி தேவையா? என கேட்டார். தான் தங்கியிருந்த விடுதிக்கு வழி தெரியவில்லை என சுற்றுலாப் பயணி கூறினார்.

அவரை தனது வாகனத்தில் கோக்கனட் விடுதிக்கு அழைத்துச் சென்றார். பாதுகாப்பாக விடுதிக்கு திரும்பிய மகிழ்ச்சியில் சிந்து குமாரியை கட்டியணைத்து வெளிநாட்டுப் பெண் நன்றி தெரிவித்தார். இந்த வீடியோ சமூக ஊடகத்தில் வைரலாகியுள்ளது.

SCROLL FOR NEXT