பால் உற்பத்தியை அதிகரிக்க 2 புதிய கலப்பின பசுக்கள்

பால் உற்பத்தியை அதிகரிக்க 2 புதிய கலப்பின பசுக்கள்
Updated on
1 min read

புதுடெல்லி: இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் விலங்கு மரபு வளம் தேசிய பிரிவு (ஐசிஏஆர்-என்பிஏஜிஆர்) டெல்லியில் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் 16 வகையான புதிய கால்நடைகள் மற்றும் கோழி இனங்களை பதிவு செய்ததற்கான சான்றிதழ்களை மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் வழங்கினார்.

இதில் கரன் பிரைஸ் மற்றும் விருந்தவானி என்ற இரு கலப்பின பசுக்களும் பதிவு செய்யப்பட்டன. இந்த பசுக்கள் 10 மாத பால் கறக்கும் காலத்தில் 3,000 கிலோ பால் உற்பத்தி செய்யும் திறன் படைத்தவை. மற்ற இன பசுக்கள் 1000 முதல் 2000 கிலோ பால் உற்பத்தி செய்யக் கூடியவை. இத்துடன் சேர்த்து இந்தியா பதிவு செய்துள்ள கால்நடைகள் மற்றும் கோழி இனங்களின் எண்ணிக்கை 246-ஆக உயர்ந்துள்ளது.

ஹரியானாவின் கர்னல் பகுதியில் உள்ள தேசிய பால் ஆராய்ச்சி மையம், உள்நாட்டு தர்பர்கர் பசுக்கள் மற்றும் ஹால்ஸ்டீன்-ஃபிரஸ்சியன் காளைகளை இணைத்து கரன் பிரைஸ் வகையை உருவாக்கியது. உ.பி. பரேலியில் உள்ள இந்திய கால்நடை ஆராய்ச்சி மையம், ஹால்ஸ்டீன்-ஃபிரஸ்சியன், பிரவுன் சுவிஸ் மற்றும் ஜெர்சி இனம், உள்நாட்டு ஹரியானா மாடுகளை இணைத்து விருந்தவானி பசுவை உருவாக்கியது.

பால் உற்பத்தியை அதிகரிக்க 2 புதிய கலப்பின பசுக்கள்
டேரில் மிட்​செல் 131*, வில் யங் 87 ரன்​கள் விளாசல்: இந்​தி​யா​வுக்கு பதிலடி கொடுத்​தது நியூஸிலாந்து அணி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in