செம்மஞ்சேரியில் ‘காவல் கரங்கள்’ பிரிவு போலீஸாரால் மீட்கப்பட்ட மூதாட்டியை அவரது குடும்பத்தினரிடம் காவல் கூடுதல் ஆணையர் (தலைமையிடம்) விஜயேந்திர பிதாரி, உதவி ஆணையர் (மக்கள் தொடர்பு) எம்.எஸ்.பாஸ்கர், ஆய்வாளர் மேரி ரஜு ஆகியோர் ஒப்படைத்தனர்.

 
வாழ்வியல்

மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் காணாமல் போன மூதாட்டியை மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்த போலீஸார்

செய்திப்பிரிவு

சென்னை: மனநலம் பாதிக்​கப்​பட்ட நிலை​யில் காணா​மல் போன மூதாட்டியை மீட்டு குடும்​பத்​தினரிடம் போலீ​ஸார் ஒப்​படைத்​தனர்.

செம்​மஞ்​சேரி பேருந்து நிலை​யம் அருகே வாய் பேச முடி​யாமல், காது கேட்​காமல், மனநிலை பாதிக்​கப்​பட்ட மூதாட்டி ஒரு​வர் பரி​தாப​மாக சுற்​றித்திரிவ​தாக சென்னை காவல் துறை​யில் உள்ள ‘காவல் கரங்​கள்’ பிரிவு போலீ​ஸாருக்கு தகவல் கிடைத்​தது.

இதையடுத்​து, அப்​பிரிவு போலீ​ஸார் சம்​பந்​தப்​பட்ட மூதாட்டியை மீட்டு முடிச்​சூரில் உள்ள முதி​யோர் இல்​லத்​தில் சேர்த்து பராமரித்​தனர்.

அவரது புகைப்படம் தமிழகத்​தில் உள்ள அனைத்து காவல் நிலை​யங்​களுக்​கும் அனுப்பிவைக்​கப்​பட்​டது. இதில் மீட்​கப்​பட்​ட​வர் சென்னை முத்​தி​யால்​பேட்​டையை சேர்ந்த மும்​தாஜ் (65) என்​பது தெரிய​வந்​தது.

இதையடுத்து அவரது சகோ​தரி மகனிடம் காவல் கூடு​தல் ஆணை​யர் (தலை​மை​யிடம்) விஜயேந்​திர பிதாரி ஒப்​படைத்​தார். காவல் உதவி ஆணை​யர் (மக்​கள் தொடர்​பு) பாஸ்​கர், காவல் கரங்​கள் பிரிவு காவல் ஆய்​வாளர் மேரி ரஜு ஆகியோர் உடனிருந்​தனர்.

விசா​ரணை​யில், மாற்​றுத் திற​னாளி​யான மூதாட்டி மும்​தாஜை கடந்த 7-ம் தேதி முத்​தி​யால்​பேட்டை பகு​தியி​லிருந்​து, கொடுங்​கையூர், எஸ்​.ஏ.​காலனி 10-வது தெரு​வில் உள்ள சகோ​தரி மகன் வீட்​டுக்கு அழைத்​துச் செல்​லும்​போது, காணா​மல் போனது தெரிய​வந்​தது. கடந்த 2021-ம் ஆண்டு முதல் இது​வரை 9,285 வீடற்ற, ஆதர​வற்ற நிலை​யில் உள்​ளோர் மீட்​கப்​பட்​டனர். இதில் 1,498 பேர் காணா​மல் பரித​வித்த அவர்​களது குடும்​பத்​தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT