மகளிர் சுயஉதவிக் குழுக்களின் பொருட்கள் ரூ.690 கோடிக்கு விற்பனை: துணை முதல்வர் உதயநிதி பெருமிதம்

நுங்கம்பாக்கம், அன்னை தெரசா மகளிர் வளாகத்தில், நடைபெறும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்பு பொருட்கள் விற்பனைக் கண்காட்சியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்து, விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த தயாரிப்பு பொருட்களை பார்வையிட்டார்.

நுங்கம்பாக்கம், அன்னை தெரசா மகளிர் வளாகத்தில், நடைபெறும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்பு பொருட்கள் விற்பனைக் கண்காட்சியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்து, விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த தயாரிப்பு பொருட்களை பார்வையிட்டார்.

Updated on
1 min read

சென்னை: கிறிஸ்​து​மஸ், புத்​தாண்டு மற்​றும் பொங்​கல் பண்​டிகைகளை முன்​னிட்டு மகளிர் சுயஉதவிக் குழு​வினரின் விற்​பனை கண்​காட்​சியை வள்​ளுவர் கோட்​டத்​தில் தொடங்கி வைத்த துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின், நடப்​பாண்​டில் சுயஉதவிக் குழு​வினரின் பொருட்​கள் ரூ.690 கோடிக்கு விற்​பனை​யான​தாக தெரி​வித்​தார்.

மகளிர் சுயஉதவிக் குழு​வினர் தயாரிக்​கும் பொருட்​கள் அனைத்து தரப்​பினரை​யும் சென்​றடை​யும் வகை​யில் தமிழ்​நாடு மகளிர் மேம்​பாட்டு நிறு​வனம், பண்​டிகைக் காலங்​களில் சிறப்பு விற்​பனை கண்​காட்​சிகளை அவ்​வப்​போது நடத்தி வரு​கிறது.

அதன்​படி சென்னை வள்​ளுவர் கோட்​டத்​தில் உள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்​தில் மதி சிறப்பு விற்​பனை கண்​காட்​சியை நேற்று தொடங்​கி​யுள்​ளது.

இந்த​கண்​காட்​சியை துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் நேற்று தொடங்கி வைத்​து, வாடிக்​கை​யாளர்​களை ஊக்​குவிக்​கும் வகை​யில் வாடிக்​கை​யாளர் அடை​யாள அட்​டைகளை அறி​முகப்​படுத்​தி​னார்.

தொடர்ந்து மதுரை மாவட்​டத்​தில் மகளிர் சுயஉதவிக் குழு​வினரின் உணவுத் திரு​விழாவை சிறப்​பாக நடத்​திய, மதுரை மாவட்ட மகளிர் திட்ட இயக்​குநர் மற்​றும் உணவு விற்​பனை​யில் முதலிடம் பிடித்த சுயஉதவிக் குழு​வுக்கு கேட​யம் மற்​றும் சான்​றிதழ்​களை வழங்​கி​னார்.

பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: இந்த விற்​பனை கண்​காட்சி ஜன.4-ம் தேதி வரை 18 நாட்​களுக்கு நடை​பெற உள்​ளது. இதில் 72 சுயஉதவிக் குழுக்​களை சேர்ந்த உறுப்​பினர்​களின் 50 அரங்​கு​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன.

நடப்பு நிதி​யாண்​டில் மகளிர் சுயஉதவிக் குழுக்​களின் தயாரிப்​பு​களை ரூ.600 கோடிக்கு விற்​பனை செய்ய இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்ட நிலை​யில், நிதி​யாண்டு முடிவதற்கு 3 மாதங்​களுக்கு முன்​ன​தாகவே ரூ.690 கோடிக்கு பொருட்​கள் விற்​பனை​யாகி இலக்கை விஞ்​சி​உள்​ளது.

மத்​திய அரசிடம் இருந்து தமிழகத்​துக்கு வரவேண்டிய ரூ.4 ஆயிரம் கோடி நிதி இன்​ன​மும் வரவில்​லை. அதை வலி​யுறுத்தி கேட்​டுக்​கொண்​டிருக்​கிறோம். இவ்​வாறு அவர் கூறி​னார். நிகழ்​வில் தயாநிதி மாறன் எம்​.பி. ஊரக வளர்ச்​சித் துறை செயலர் ககன்​தீப் சிங் பேடி, தமிழ்​நாடு மகளிர் மேம்​பாட்டு நிறு​வனத்​தின் மேலாண்மைஇயக்​குநர் ஆர்​.​வி.ஷஜீவனா உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்​.

<div class="paragraphs"><p>நுங்கம்பாக்கம், அன்னை தெரசா மகளிர் வளாகத்தில், நடைபெறும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்பு பொருட்கள் விற்பனைக் கண்காட்சியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்து, விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த தயாரிப்பு பொருட்களை பார்வையிட்டார். </p></div>
மக்களை காப்போம் எழுச்சிப் பயணம்: திருப்போரூரில் டிச.28-ம் தேதி பழனிசாமி பங்கேற்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in