வாழ்வியல்

பெங்களூரு விமான நிலைய ஓட்டலில் ஒரு பிளேட் இட்லி ரூ.315: வைரலான பயணியின் பதிவு

இரா.வினோத்

பெங்களூரு: பெங்​களூரு விமான நிலை​யத்​தில் உள்ள ராமேஷ்வரம் கஃபே ஓட்​டலில் ஒரு பிளேட் இட்லி ரூ.315-க்கு விற்கப்​படு​வது ஏன் என்று பயணி ஒரு​வர் இணை​யத்​தில் கேள்வி எழுப்​பி​னார்.

பெங்​களூருவை சேர்ந்த பயணி ரெட்​டிட் சமூக வலைதள பக்கத்தில் இதுகுறித்து பதிவொன்றை எழு​தி​யுள்​ளார். அதில் கூறியிருப்​ப​தாவது: பெங்​களூரு கெம்பே கவுடா சர்​வ​தேச விமான நிலை​யத்​தில் உள்ள ராமேஷ்வரம் கஃபே ஓட்​டலில் ஒரு பிளேட் நெய் பொடி இட்லி சாப்​பிட்​டேன். அதன் விலை ரூ.315. ஏன் இவ்வளவு அதிக விலை?

          

பெங்​களூரு மாநகரத்​தில் விற்கப்படுவதை​விட நான்கு மடங்கு கூடு​தலான‌ விலை​யில் உணவுப் பொருட்​கள் விற்​கப்​படு​கின்​றன ? இந்த மோசடி தடுத்து நிறுத்​தப்பட வேண்​டும்.

விமான நிலை​யங்​களில் விற்​கப்​படும் உணவுப் பொருட்​களின் விலையை நிர்​ண​யம் செய்ய ஏதேனும் அமைப்பு உள்​ள​தா ? பயணி​கள் இது குறித்து முறை​யிட வாய்ப்பு இருக்​கிற​தா ? இவ்வாறு அவர் கேள்வி எழுப்பி உள்​ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலான நிலை​யில், ஏராள​மானோர் ராமேஷ்வரம் கஃபே ஓட்​டலை விமர்​சித்​துள்​ளனர். இந்தப் பகல் கொள்​ளையை அரசு தடுத்து நிறுத்த வேண்​டும் என்​றும் வலியுறுத்​தி​யுள்​ள‌னர்​.

SCROLL FOR NEXT