வாழ்வியல்

கலாமை எப்படிப் பார்க்கிறோம்?

அக்.15 - அப்துல் கலாம் பிறந்தநாள்

Guest Author

எந்தவொன்றையும் பார்த்து, புரிந்து, உணர்ந்து செயலாற்றுவதன் அடிப்படையிலேயே, அதன் மதிப்பை அறிய முடியும்.

அப்துல் கலாமின் வாழ்க்கை நிகழ்வுகளை, உரைகளை, நூல்களை அறிந்த பிறகு, நாம் ஒவ்வொருவரும் அவரை எப்படிப் பார்க்கிறோம் என்பது முக்கியமானது.

2000களில் எடுத்துக்காட்டத் தகுந்த தலைவர்களின் எண்ணிக்கை அருகியபோது, அரும்பெரும் மனிதராக உயர்ந்தவர் கலாம்.

அறிவியலாளராக, சில விண்வெளித் திட்டங்களின் தலைவராக, பாதுகாப்புத் துறை ஆலோசகராக, ஆசிரியராக, குடியரசுத்தலைவராக என அவரது செயல்பாடுகள் பன்முகத்தன்மை வாய்ந்தவை.

அதில் பெருமிதம் கொள்ளாத மனப்பாங்கும் அனைவரும் அணுகுகிற வகையில் தன்னை முன்னிறுத்தியதும் சாதாரண விஷயமல்ல.

குடியரசுத்தலைவர் பதவியில் இருந்தபோது, அதிகாரமும் அமைதியும் ஒன்றிணைந்திருக்க முடியும் என்று காட்டினார்.

அவரது பதவிக்காலத்தில், குடியரசுத்தலைவர் மாளிகையில் பல மரபுகள் மாற்றப்பட்டன. அதற்குக் காரணம், அவரது பார்வை.

மிகச் சாதாரண குடும்பத்தில் பிறந்தாலும் தன்முயற்சியால் எத்தகைய உயரங்களையும் அடையலாம் என்பதற்கு எடுத்துக்காட்டு, கலாம்.

குழந்தைகளின் கேள்விகளுக்கும் பொறுமையாகப் பதிலளித்த குணம், வாழ்வின் இறுதித் தருணம்வரை இயங்கியது என கலாம் வாழ்வில் தேடித் தேடிக் கற்கப் பல கூறுகள் இருக்கின்றன.

அனைத்தையும் மீறி, ‘கனவு காணுங்கள்’ என்கிற வார்த்தைகளால் இனிவரும் தலைமுறையும் இலக்கினை அறியத் தூண்டுதலாக இருப்பார்!

- மாபா

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT