வாழ்வியல்

பைக் ஓட்டுநர்களுக்கு ‘முட்டை’ வழங்கி சென்னை போலீஸார் நூதன விழிப்புணர்வு!

செய்திப்பிரிவு

இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு முட்டை வழங்கி போக்குவரத்து போலீஸார் நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அனைவரும் சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும், இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது தொடர்பாக போக்குவரத்து போலீஸார் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், வேளச்சேரி போக்குவரத்து போலீஸார் நேற்று வேளச்சேரி 100 அடி சாலையில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு முட்டை வழங்கி நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

வேளச்சேரி போக்குவரத்து இணை ஆணையர் அறிவுறுத்தலின் பேரில், போக்குவரத்து காவல் ஆய்வாளர் கதிரவன் தலைமையில், உதவி ஆய்வாளர் அப்துல் மஜீத் உள்ளிட்ட போலீஸார் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். ‘வாகன ஓட்டிகள் மட்டுமின்றி, பின்னால் அமர்ந்திருப்பவரும் கண்டிப்பாக தலைக் கவசம் அணிய வேண்டும். இல்லாவிட்டால் உயிர்ச் சேதம் ஏற்படும்’ என்று அறிவுரை வழங்கினர்.

அப்போது, ஹெல்மெட் அணிந்து வருபவர்களுக்கு ‘முட்டை’ வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ‘‘முட்டைக்கு ஓடு எவ்வளவு முக்கியமோ, அதேபோல, தலைக்கு தலைக் கவசம் அவசியம்’’ என்பதை போலீஸார் எடுத்துக் கூறினர்.

SCROLL FOR NEXT