வாழ்வியல்

‘சாப்பிட்டதும் நடக்கக் கூடாது’ - ஓர் எளிய ‘நடைப்பயிற்சி’ வழிகாட்டி

செய்திப்பிரிவு

உடலுக்கு நன்மை செய்யும் உடற்பயிற்சிகளில், நடைப்பயிற்சியே மிகவும் எளிதானது. உடல் முழுமைக்கும் ஒரே நேரத்தில் பயிற்சி கொடுக்க வேண்டுமானால், அது நடைப்பயிற்சியால் மட்டுமே முடியும். இதனால்தான் நடைப்பயிற்சியை ‘உடற்பயிற்சிகளின் அரசன்’ என்கிறோம்.

நன்மைகள்

  • நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும்
  • மாரடைப்பு ஏற்படுவதைத் தடுக்கும்
  • உடல் பருமனைக் குறைக்கும்
  • சுவாச நோய்களைக் தவிர்க்க உதவும்
  • மன அழுத்தத்தைக் தவிர்க்கும்
  • முழங்கால் வலியைத் தடுக்கும்
  • கால் தசைகளை வலுவாக்கும்

எப்படி நடக்க வேண்டும்?

> தினமும் குறைந்தது 30 நிமிடங்கள், அதிகபட்சமாக 1 மணி நேரம் நடக்க வேண்டும்.

> நடக்கின்ற தூரம்தான் அளவு என்றால், தினமும் 3-லிருந்து 5 கி.மீ. தூரம் வரை நடக்க வேண்டும்.

> தினமும் நடக்க முடியாதவர்கள் உலகச் சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைப்படி குறைந்தது வாரத்தில் 5 நாட்கள் அல்லது 150 நிமிடங்கள் வரை நடக்கலாம். முக்கியமான விஷயம், சாப்பிட்டதும் நடக்கக் கூடாது;

யார் நடக்கக்கூடாது?

  • உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள்
  • நெஞ்சு வலி இருப்பவர்கள்
  • அடிக்கடி மயக்கம் வருபவர்கள்
  • முழங்கால் மூட்டு வலி, குதிகால் வலி போன்ற பிரச்சினைகள் உள்ளவர்கள்

- இவர்கள் மருத்துவரிடம் ஆலோசனையைப் பெற்றுத்தான் நடக்க வேண்டும்.

நடைப்பயிற்சி என்றாலே, மூச்சிரைக்க நடக்க வேண்டும் என்றுதான் எல்லோரும் நினைக்கிறார்கள். அது தேவையில்லை. இரண்டு பேர் பேசிக்கொண்டே நடந்துசெல்லும்போது, ஒருவர் பேசுவது அடுத்தவருக்குத் தெளிவாகப் புரிய வேண்டும். அந்த வேகம் போதும்.

நீரிழிவு நோயுள்ளவர்கள் எம்.சி.ஆர். செருப்புகள்/எம்.சி.பி. ஷூக்களை அணிந்து கொண்டு நடக்க வேண்டும். இவர்கள் வெறும் வயிற்றில் நடப்பதைவிட 200 மி.லி. பால் அல்லது மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட பழச்சாறு சாப்பிட்டுவிட்டு நடப்பது நல்லது.

> இது, பொது நல மருத்துவர் கு.கணேசன் எழுதிய இந்து தமிழ் திசை ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்

> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்

SCROLL FOR NEXT