வாழ்வியல்

மனப் பதற்றத்துக்கும் சரும பாதிப்புக்கும் தொடர்பு உண்டு - எப்படி?

செய்திப்பிரிவு

ஒருவரது கவலையும் அழுத்தமும் அவருக்கு முகப்பரு, சரும அரிப்பு, சோரியாசிஸ், படை போன்ற சரும பிரச்சினைகள் உருவாக காரணமாக இருக்கலாம் என்கிறார் தோல்மருத்துவரும் ஆராய்ச்சியாளருமான என்ரிஸா.பி. ஃப்க்டர் எம்.டி.,

மன அழுத்தமும் சரும அரிப்பு உணர்வும்: கவலையால் உண்டாகும் சரும அரிப்பு உணர்வு "சைக்கோஜெனிக் இட்ச்சிங்" ( (psychogenic itching) எனப்படுகிறது. இந்த உணர்வு கவலை மன அழுத்தம் போன்றவை ஏற்படும் போது சரும அரிப்பை அதிகரிக்கச் செய்து ஒரு இயல்பற்றத்த தன்மையை உருவாக்கி, உடனடியாக சொரிந்து கொள்ள வேண்டும் என்ற உணர்வை நமக்கு ஏற்படுத்துகிறது.

மன அழுத்தமும் சரும அரிப்பு உணர்வும் நெருங்கிய தொடர்புடையவை. மன அழுத்தத்திற்கு காரணமான கார்டிசோல் ஹார்மோன் அளவு அதிகரிக்கும்போது அது தோலுக்கடியில் வீக்கத்தை ஏற்படுத்தி, அட்ரனல் சுரப்பியின் பணிகளில் பாதிப்பை ஏற்படுத்தி தோல் அரிப்புக்கு காரணமாகி விடுகிறது என்கிறார் bowtiedlife.com-ல் தோல் மருத்துவ இயக்குனராக இருக்கும் செரில் ரோஷன் எம்.டி.,

சைக்கோஜெனிக் இட்ச்சிங்: மனித மூளையும் சரும அரிப்பு உணர்வை உண்டாக்குவதில் முக்கியமான பங்காற்றுகிறது. நமக்கு அரிப்பு போன்ற உணர்வு ஏற்படும்போது, மூளையின் உணர்வு, உணர்வு மையங்கள் தூண்டப்படுகின்றன. இது கவலை - அரிப்பு சுழற்சிக்கு வழிவகுத்து நோயாளியின் நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்தி அவரது வாழ்க்கைத் தரத்தை பாதிக்கிறது என்று நரம்பியல் மற்றும் நடத்தை குறித்த ஆய்வில் கண்டறிப்பட்டுள்ளது.

க்ளினிகல் தோல் மருத்துவம் இதழில் பதிப்பிக்கப்பட்ட ஆய்வு ஒன்றில், தோல் நோய்கள் மூன்று முக்கிய வகையாக பிரிக்கப்பட்டுள்ளன. அவை: மனநலனை பாதிக்கும் அரிப்பு நோய்கள், மனநல காரணிகளால் மோசமடையும் அரிப்பு நோய்கள், சைக்கோஜெனிக் அரிப்புகள்.

நீங்கள் அரிப்பு அதிகம் இருப்பதாக உணரும் போது உங்கள் மருத்துவர் நோய் காரணிகளை முழுமையாக ஆராய்ந்து அந்த அரிப்பு, சருமம், உடலுறுப்பு, நரம்பியல், மனநோயால் ஏற்பட்டதா என்பதை கண்டறிகிறார். சரும பாதிப்பு காரணங்களால் ஏற்பட்ட அரிப்பு ஆய்வக அல்லது திசு சோதனைகள் மூலமாக கண்டறியப்படும். அரிப்பு ஏற்பட்டதற்கான எந்த மருத்துவக் காரணமும் கண்டறியப்படாத போது மருத்துவர் உங்களை உளவியல் நிபுணரைப் பார்க்க அறிவுறுத்துவார்.

பதற்றத்தைக் குறையுங்கள்: துரதிர்ஷ்டவசமாக சைக்கோஜெனிக் அரிப்பு அரிதாகவே உளவியலாளரிடம் குறிப்பிடப்படுகிறது என்கிறார் பேர்டர். நோயாளி கவலையுடன் இருப்பதால் அல்லது மருத்துவரிடம் எந்த நோய்க் காரணத்தையும் குறிப்பிடாததால், சைக்கோஜெனிக் அரிப்பு காரணம் அறிப்படாத இடியோபதிக் அரிப்பாக புரிந்து கொள்ளப்படுகிறது.

எது முதலில் வந்தாலும் பரவாயில்லை. அரிப்பு, பதற்றத்தின் சுழற்சியை உடைத்து, அதற்கான காரணத்தை கண்டறிந்து, மன அழுத்தத்தை சரியாகக் கையாண்டு, சருமத்தை நல்லமுறையில் பேண வேண்டும். இதற்கு அதிக நாள்கள் எடுக்கலாம். நிபுணர்களின் வழிகாட்டுதல்களுடன் சீக்கிரம் அரிப்பிலிருந்து விடுபட முடியும்.

> இது, 'இந்து தமிழ் திசை' ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்

> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்

SCROLL FOR NEXT