லாலு பிரசாத், ராப்ரி தேவி

 
இந்தியா

லாலு பிரசாத், ராப்ரி தேவியின் இசட்-பிளஸ் பாதுகாப்பு வாபஸ்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: பிஹாரில் விஐபிகளின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ராஷ்ட்ரிய ஜனதாதளம் தலைவரும் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத், அவரது மனைவியும் முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவிக்கு வழங்கப்பட்டு வந்த இசட் பிளஸ் பாதுகாப்பு இனி தேவை இல்லை என முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து அவர்களுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது.

மேலும் லாலுவின் மூத்த மகனும், ஜன்சக்தி ஜனதா தள தலைவருமான தேஜ் பிரதாபுக்கு வழங்கப்பட்டு வந்த ஒய் பிரிவு பாதுகாப்பை வாபஸ் பெறுவதாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. எனினும் தேஜஸ்வி யாதவுக்கு வழங்கப்பட்டு வந்த ஒய்-பிளஸ் பாதுகாப்பு, அவரது மனைவி ராஜ் யாதவ், லாலு மகளும், மாநிலங்களவை எம்.பி.யுமான மிசா பாரதி ஆகியோருக்கு தற்போதுள்ள பாதுகாப்பை தொடரவும் பிஹார் அரசு முடிவு செய்துள்ளது.

SCROLL FOR NEXT