இந்தியா

நாட்டின் வளர்ச்சிக்கு இளைஞர்கள் தோள்கொடுக்க வேண்டும்: பிரதமர் மோடி வேண்டுகோள்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: வினாத்தாள் கசிந்தால், இனிமேல் குற்றவாளிகள் தப்ப முடி​யாது என்​று பிரதமர் மோடி உறுதியாகக் கூறியுள்ளார்.

நீட் வினாத்தாள் கசிவை கண்​டித்து இளைஞர்​கள் நாடு முழு​வதும் தொடர் போராட்​டங்​களை நடத்​தினர். இதுதொடர்​பாக கடந்த 23-ம் தேதி நள்​ளிர​வில் பிரதமர் மோடி ஒரு செல்ஃபி வீடியோவை வெளி​யிட்​டார். அதில், “வி​னாத்​தாள் கசிவு வழக்​கு​களை விசாரிக்க விரைவு நீதி​மன்​றங்​கள் அமைக்​கப்​படும். நாடாளுமன்றத்​தில் புதிய மசோதா நிறைவேற்​றப்​படும்” என்று உறுதி அளித்​தார்.

கடந்த 24-ம் தேதி பிரதமர் மோடி மீண்​டும் ஒரு செல்ஃபி வீடியோவை வெளி​யிட்​டார். அதில், தனது வீடியோவுக்கு பதில் அளித்து ஆக்​கப்​பூர்​வ​மாக கருத்​துகளை பதி​விட்ட அனை​ருக்கும் நன்றி தெரி​வித்​தார்.

கடந்த 26-ம் தேதி அவர் மீண்​டும் ஒரு செல்ஃபி வீடியோவை வெளி​யிட்​டார். அதில், “பொதுத்​தேர்​வு, நுழைவுத் தேர்வு நடை​முறை​களில் சீர்​திருத்​தங்​களை அமல் செய்வது தொடர்​பாக நந்​தன் நில​கேனி தலை​மை​யில் உயர்​நிலைக் குழு அமைக்​கப்​படும்” என்று தெரி​வித்​தார்.

இதைத் தொடர்ந்து நேற்று முன்​தினம் இரவு பிரதமர் மோடி 4-வது வீடியோவை வெளி​யிட்​டார். அதில் கூறி​யிருப்​ப​தாவது: பல ஆண்டு​களாக வினாத்​தாள் கசிவு பிரச்​சினை மத்​திய, மாநில அரசுகளுக்கு மிகப்​பெரிய சவாலாக நீடித்து வரு​கிறது. மாணவ, மாண​வியரின் எதிர்​காலத்தை கேள்விக்​குறி​யாக்கி வரு​கிறது.

இந்த பிரச்​சினைக்கு தீர்வு காண கல்வி நடை​முறை​களில் சீர்​திருத்​தங்​கள் அமல் செய்​யப்​பட்டு வரு​கின்​றன. நான் ஏற்​கெனவே உங்​களிடம் (மாணவர்​களிடம்) வாக்​குறுதி அளித்​த​படி சில நாட்களுக்கு முன்பு வினாத்​தாள் கசிவு தடுப்பு மசோதா நாடாளுமன்றத்​தில் தாக்​கல் செய்​யப்​பட்​டது. இந்த மசோதா குறித்து இரு அவை​களி​லும் விரி​வான விவாதம் நடத்​தப்​பட்​டது.

கடந்த வியாழக்​கிழமை நாடாளு​மன்​றத்​தில் புதிய சட்​டம் நிறைவேற்​றப்​பட்டு உள்​ளது. இனிமேல் வினாத்​தாள் கசிவு குற்றவாளி​கள் தப்ப முடி​யாது. வளர்ச்சி அடைந்த இந்​தி​யாவை உரு​வாக்க இளைஞர்​கள் தோளோடு தோள் நின்று பணி​யாற்ற வேண்டும்​. இவ்​வாறு பிரதமர் பேசி​னார்​.

SCROLL FOR NEXT