புதுடெல்லி: டெல்லி உத்தம் நகர் பகுதியில் கடந்த 4-ம் தேதி ஹோலி கொண்டாட்டாட்டத்தின் போது ஒரு சிறுமி வண்ணப் பொடிகள் தூவி உள்ளார்.
அது முஸ்லிம் பெண் மீது விழுந்ததால் முஸ்லிம் பெண் குடும்பத்தாருக்கும், சிறுமியின் குடும்பத்தாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் படுகாயமடைந்த தருண்குமார் (26) என்பவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். இதையடுத்து தருண்குமார் குடும்பத்தார் போராட்டம் நடத்தினர். போலீஸார் தலையிட்டு அவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.