இந்தியா

ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புக்கு ஆதரவு தெரிவித்த இளைஞர் கைது

செய்திப்பிரிவு

மும்பை: மும்பை மாஹிமைச் சேர்ந்த முகமது ஹசன் அபு சர்மத் அக்தர் (32), செயலி மூலம் இயங்கும் பைக் டாக்ஸி சேவையில் ஓட்டுநராக வேலை செய்து வருகிறார்.

இவர் வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற தளங்களில் பல குழுக்களை உருவாக்கியிருந்தார். அவற்றில், ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் நிறுவனர் மவுலானா மசூத் அசாரின் வீடியோக்கள், ஆடியோ பதிவுகளைத் தொடர்ந்து பகிர்ந்து வந்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தொடர்பான ஒரு பதிவின் கீழ் ஆட்சேபகரமான கருத்துகளையும் பதிவிட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மாஹிம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் பாகிஸ்தான் உளவாளியுடன் தொடர்பில் இருப்பதாக, மகாராஷ்டிர பயங்கரவாதத் தடுப்புப் படைக்கு குறிப்பிட்ட ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படை யில் அக்டோபர் 21 அன்று அவர் கைது செய்யப்பட்டார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT