பிலிப்பைன்ஸில் பயிற்சியின் போது நடுவானில் 2 ராணுவ விமானங்கள் மோதி விபத்து

பிலிப்பைன்ஸில் பயிற்சியின் போது நடுவானில் 2 ராணுவ விமானங்கள் மோதி விபத்து
Updated on: 
1 min read

மணிலா: பிலிப்​பைன்​ஸில் உள்ள விமானப்​படைத் தளத்​தில் பயிற்​சி​யில் ஈடு​பட்​டிருந்த இரண்டு ராணுவ விமானங்​கள் நடுவானில் மோதிக் கொண்​டதில், நான்கு விமானிகள் உயி​ரிழந்​தனர்.

பிலிப்​பைன்ஸ் தலைநகர் மணிலா​வின் தெற்​குப் பகுதி​யில் உள்ள பெர்​னாண்டோ விமானப்​படைத் தளத்​தில் நேற்​றுமுன்​தினம் ‘எஸ்எப்-260’ ரக 2 விமானங்​கள் மோதிக் கொண்டு விபத்​துக்​குள்​ளாகின.

இது​குறித்து, பிலிப்​பைன்ஸ் விமானப்​படை செய்​தித் தொடர்​பாளர் கர்​னல் ஆல்​வின் கபிங்​குயான் வெளி​யிட்ட செய்​திக் குறிப்​பில், “பிலிப்​பைன்​ஸில் உள்ள விமானப்​படைத் தளத்​தில் பயிற்​சி​யில் ஈடு​பட்​டிருந்த இரண்டு ‘எஸ்எப்-260’ ரக ராணுவ விமானங்​கள் நடுவானில் மோதிக் கொண்​டதில், நான்கு விமானிகள் உயி​ரிழந்​தனர். இதில் வேறு யாருக்​கும் பாதிப்பு ஏற்​பட​வில்லை.

முன்​னெச்​சரிக்கை நட​வடிக்​கை​யாக, விமானப்​படை​யிடம் உள்ள ‘எஸ்எப்-260’ ரக விமானங்​களின் இயக்​கம் தற்​காலிக​மாக நிறுத்தி வைக்​கப்​பட்​டுள்​ளது” என தெரி​விக்​கப்​பட்​டுள்​ளது.

பிலிப்​பைன்​ஸில் கடந்த சில ஆண்​டுகளாக ராணுவ விமானங்​கள் அடிக்​கடி விபத்​துக்​குள்​ளாகி வரு​கின்​றன. கடந்த மே மாதம், வடக்கு பிலிப்​பைன்​ஸின் பெங்​கு​வெட் மாகாணத்​தில் பயிற்சி விமானப் பயணத்​தின்​போது மற்​றொரு ‘எஸ்எப்-260’ ரக விமானம் விபத்​துக்​குள்​ளானதில் 2 ராணுவ விமானிகள் உயி​ரிழந்​தனர்.

பிலிப்பைன்ஸில் பயிற்சியின் போது நடுவானில் 2 ராணுவ விமானங்கள் மோதி விபத்து
உடன்பாட்டுக்கு வராவிட்டால் ஈரான் மீது மீண்டும் போர் தொடுப்போம்: ட்ரம்ப் எச்சரிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in