புதுடெல்லி: நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள சமூக சேவகர் சோனம் வாங்சுக்கை போலீஸார் நேற்று மருத்துவமனையில் சேர்த்தனர். இதையடுத்து தான் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்குவதாகக் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜெபி) நிறுவனர் அபிஜித் தீப்கே அறிவித்தார்.
அப்போது அவர் மீது பெண் ஒருவர் மை வீசிவிட்டுச் சென்றார். இதனால் அந்தக் கூட்டத்தில் சற்று நேரம் சலசலப்பு ஏற்பட்டது. அந்தப் பெண்ணின் அடையாளம், அவர் எதற்காக மை வீசினார் என்ற விவரம் உடனடியாகத் தெரியவில்லை.