இந்தியா

மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி: ராகுல் வீடு நோக்கி பாஜக பெண் தலைவர்கள் பேரணி

செய்திப்பிரிவு

புதுடெல்லி: மக்​களவை​யில் மகளிர் இடஒதுக்​கீடு மசோ​தா​ நேற்று முன்தினம் தாக்​கல் செய்​யப்​பட்​டது. இதன் மீது நடை​பெற்ற வாக்​கெடுப்​பில் காங்​கிரஸ் உள்​ளிட்ட எதிர்க்​கட்​சிகள் எதிர்த்து வாக்​களித்​தன. இதனால் இந்த மசோ​தா தோல்​வியடைந்​தது.

இந்​நிலை​யில், பாஜக நாடாளு​மன்ற எம்​.பி.க்​கள் ஹேம​மாலினி மற்​றும் பன்​சூரி ஸ்வ​ராஜ் உள்​ளிட்ட பெண் தலை​வர்​கள், டெல்​லி​யில் உள்ள காங்​கிரஸ் மூத்த தலை​வர் ராகுல் காந்​தி​யின் வீட்டை நோக்கி நேற்று ஒரு பிரம்​மாண்​ட​மான போராட்​டப் பேரணியை நடத்​தினர். அப்போது ராகுல் வீட்டில் இல்லை.

வீதிப் போராட்​டங்​கள் முதல் சமூக வலை​தளங்​கள் வரை காங்​கிரஸ் மற்​றும் பிற எதிர்க்​கட்​சிகள் மீது பாஜக கடுமை​யான தாக்​குதல்​களைத் தொடுத்து வரு​கிறது. பாஜக​வின் டெல்லி பிரிவு எக்ஸ் தளத்​தில் பகிர்ந்த ஒரு போஸ்​டரில், ராகுலை ‘துரோகி' என்று குறிப்​பிட்​டுள்​ளது.

அந்​தப் பதி​வில் ‘‘பெண் சக்​திக்​கான 33 சதவீத இடஒதுக்​கீட்​டைத் தடுத்த இந்த வில்​லன்​களை நாட்​டின் சரி​பாதி மக்​கள் ஒரு​போதும் மன்​னிக்க மாட்​டார்​கள்’’ என்று கூறப்​பட்​டுள்​ளது. டெல்லி பாஜக தலை​வர் வீரேந்​திர சச்​தே​வா, கட்சி பெண் தலை​வர்​களு​டன் இணைந்து இந்​தப் பேரணி​யில் பங்​கேற்​றார்.

இந்த போராட்​டத்​தில் எம்​.பி.க்​கள் கமல்​ஜீத் செராவத், மஞ்சு சர்மா, கவுன்​சிலர் யோகிதா சிங் மற்​றும் கட்​சி​யின் துணைத் தலை​வர் லதா குப்தா உள்​ளிட்​டோர் கலந்து கொண்​டனர்.

அவர்​கள் கைகளில் கருப்​புக் கொடிகளை​யும், நெற்​றி​யில் கருப்​புப் பட்​டைகளை​யும் கட்​டி​யிருந்​தனர். எதிர்க்​கட்​சிகள் பெண் சக்​தியை அவம​திப்​ப​தாகக் கூறும் வாசகங்​கள் அடங்​கிய பதாகைகளை​யும் அவர்​கள் ஏந்​தி​யிருந்​தனர். டெல்லி முதல்​வர் ரேகா குப்​தா​வும் இந்​தப் போராட்​டத்​தில் கலந்து கொண்டு முழக்​கங்​களை எழுப்​பி​னார்.

3 எம்.பி.க்கள் கைது: இதனிடையே பேரணியாக சென்றவர்கள் மீது டெல்லி போலீஸார் தண்ணீரை பீய்ச்சி அடித்து கலைத்தனர். மேலும் எம்.பி.க்கள் பன்சூரி ஸ்வராஜ், ரக்சா காட்சே, கமல்ஜீத் செரா வத் உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT