ஏஐ தொழில்நுட்பம் காரணமாக மெட்டா நிறுவனத்தில் விரைவில் 16,000 ஊழியர்கள் பணிநீக்கம்

ஏஐ தொழில்நுட்பம் காரணமாக மெட்டா நிறுவனத்தில் விரைவில் 16,000 ஊழியர்கள் பணிநீக்கம்
Updated on
1 min read

வாஷிங்டன்: செயற்கை நுண்​ணறிவு தொழில்​நுட்​பம் (ஏஐ) காரண​மாக மெட்டா நிறு​வனத்​தில் விரை​வில் 16,000 ஊழியர்​கள் பணிநீக்​கம் செய்​யப்பட உள்​ளனர்.

அமெரிக்​கா​வின் கலி​போர்​னியா மாகாணம், மென்லோ பார்க் நகரை தலை​மை​யிட​மாகக் கொண்டு மெட்டா நிறு​வனம் செயல்​படு​கிறது. இந்த நிறு​வனம் வாட்ஸ் அப், பேஸ்​புக், இன்​ஸ்​டாகி​ராம் உள்​ளிட்ட பல்​வேறு சமூக வலை​தளங்​களை நிர்​வகித்து வரு​கிறது. தற்​போது மெட்டா நிறு​வனத்​தில் சுமார் 79,000 பேர் பணி​யாற்​றுகின்​றனர். அவர்​களில் 16,000 பேரை அடுத்த சில மாதங்​களில் பணிநீக்​கம் செய்ய முடிவு செய்​யப்​பட்டு இருக்​கிறது. முதல்​கட்​ட​மாக மே மாதம் 8,000 பேர் பணி நீக்​கம் செய்​யப்பட உள்​ளனர்.

இதுகுறித்து மெட்டா நிறுவன வட்​டாரங்​கள் கூறும்​போது, “நிறு​வனத்​தின் பல்​வேறு துறை​களில் செயற்கை நுண்​ணறிவு தொழில்​நுட்​பம் அறி​முகம் செய்​யப்​பட்டு இருக்​கிறது. இதனால் நிறு​வனத்​தின் ஊழியர்​களில் 20% பேரை நீக்க முடிவு செய்​யப்​பட்டுள்ளது. ஏஐ தொழில்​நுட்​பத்​தால் ஊழியர்​களின் தேவை குறைந்து வரு​கிறது. மேலும் நிறு​வனத்​தின் செல​வும் படிப்​படி​யாக குறைந்து வரு​கிறது’’ என்று தெரி​வித்​தன.

கரோனா பெருந்​தொற்று காரண​மாக மெட்டா நிறு​வனத்​தில் 21,000 பேர் பணி நீக்​கம் செய்​யப்​பட்​டனர். அதன்​பிறகு தற்​போது அந்த நிறு​வனம் மீண்​டும் மிகப்​பெரிய எண்​ணிக்​கை​யில் ஊழியர்​களை பணிநீக்​கம் செய்ய இருக்​கிறது. மெட்டா மட்​டுமன்றி பல்​வேறு நிறு​வனங்​களில் ஆட்​குறைப்பு நடவடிக்​கைகள் தீவிரமடைந்து உள்​ளன. இதுகுறித்து சர்​வ​தேச தொழில்​நுட்ப நிபுணர்​கள் கூறிய​தாவது:

ஏஐ தொழில்​நுட்​பத்​தால் ஐடி உள்​ளிட்ட பல்​வேறு துறை​களில் வேலை​யிழப்​பு​கள் அதி​கரித்து வரு​கின்​றன. கடந்த ஆண்​டில் 1.5 லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் வேலை​யிழந்​தனர். இந்த ஆண்​டில் ஆரக்​கிள், அமே​சான் உட்பட 95 பன்​னாட்டு நிறு​வனங்​கள் ஆட்​குறைப்பு நடவடிக்​கையை மேற்​கொண்டு உள்​ளன. இதன் காரண​மாக கடந்த சில மாதங்​களில் மட்​டும் 80,000 பேர் வேலை​யிழந்து உள்​ளனர்.

அமெரிக்​கா​வின் ஆரக்​கிள் நிறு​வனம் 30,000 பேரை பணி நீக்​கம் செய்ய முடிவு செய்​திருக்​கிறது. இதில் முதல் கட்​ட​மாக 12,000 பேர் அண்​மை​யில் பணிநீக்​கம் செய்​யப்​பட்டனர். அமே​சான் நிறு​வனத்​தில் அண்​மை​யில் 16,000 பேர் வேலை​யில் இருந்து நீக்​கப்​பட்டு உள்​ளனர்.

ஏஐ தொழில்​நுட்ப பயன்​பாட்​டால் அமெரிக்​கா​வின் யுனைடெட் பார்​சல் சர்​வீஸ் நிறு​வனம் அடுத்த சில மாதங்​களில் 30,000 பேரை பணி நீக்​கம் செய்ய முடிவு செய்​திருக்​கிறது. பிரிட்​டனின் முன்​னணி ஊடக​மான பிபிசி நிறு​வனத்​தில் 21,500 பேர் பணி​யாற்​றுகின்​றனர். ஏஐ பயன்​பாட்​டால் அந்த நிறு​வனத்​தில் விரை​வில் 2,000 பேர் பணி நீக்​கம் செய்​யப்பட உள்​ளனர். இவ்​வாறு அவர்​கள்​ தெரி​வித்​துள்​ளனர்​.

ஏஐ தொழில்நுட்பம் காரணமாக மெட்டா நிறுவனத்தில் விரைவில் 16,000 ஊழியர்கள் பணிநீக்கம்
ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அனுமதியை நீட்டித்தது அமெரிக்கா

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in