இந்தியா

மக்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி: எதிர்க்கட்சிகளைப் பொறியில் சிக்க வைத்ததா பாஜக?

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: நா​டாளு​மன்ற சிறப்​புக் கூட்​டத்​தில், மகளிர் இடஒதுக்​கீடு வழங்க வகை செய்​யும் அரசி​யலமைப்​புத் திருத்த மசோதா தோல்​வி​யில் முடிந்​தது.

அரசி​யலமைப்பு சட்​டத் திருத்​தம் போன்ற முக்​கிய மசோ​தாக்​களை நிறைவேற்ற நாடாளு​மன்​றத்​தின் மக்​களவை, மாநிலங்​களவை​யில் மூன்​றில் 2 பங்கு எம்​.பி.க்​களின் ஆதரவு தேவை. ஆனால், இரு அவை​களி​லும் அந்​தளவுக்கு ஆதரவு இல்லை என்று தெரிந்​தும் இந்த மசோ​தாவை பாஜக அறி​முகப்​படுத்​தி​யது. இது எதிர்க்​கட்​சிகளுக்கு விரித்த வலை என்று கூறப்​படு​கிறது. வரலாற்று சிறப்​புமிக்க மகளிர் இடஒதுக்​கீடு மசோ​தாவை நிறைவேற்ற விடா​மல் எதிர்க்​கட்​சிகள் தடுத்​து​விட்​ட​தாகவே தற்​போது அறியப்​படும். அதன்​மூலம் எதிர்க்​கட்​சிகள் பாஜக​வின் அரசி​யல் பொறி​யில் சிக்​கிக் கொண்​ட​தாகக் கூறப்​படு​கிறது.

தமிழ்​நாடு, மேற்கு வங்​கத்​தில் தேர்தல் நடை​பெறு கிறது. இந்​தச் சூழலில், மகளிர் மசோதா தோல்விக்​குக் காரணம் எதிர்க்​கட்​சிகள்​தான் என்ற கருத்தை தேர்​தல் பிரச்​சா​ரத்​தின் போது பொது​மக்​களிடம் எடுத்​துரைக்க பாஜக முயற்​சிக்​கும் என்​கின்​றனர். இது மேற்​கூறிய 2 மாநில தேர்​தலில் சாதக​மாக மாறும் என்று பாஜக.​வினர் கூறுகின்​றனர்.

அண்​மை​யில் நடை​பெற்ற தேர்​தல்​களில் பாஜக.வுக்கு பெண் வாக்​காளர்​களின் ஆதரவு அதி​க​மாக கிடைத்​தது. அதை மேலும் வலுப்​படுத்த பாஜக முயற்​சிக்​கும். குறிப்​பாகப் பெண் வாக்​காளர்​கள் முக்​கிய இடம் பெற்ற மேற்கு வங்க மாநிலத்​தில், பாஜக இந்​தப் பிரச்​சினையை ஒரு முக்​கிய ஆயுத​மாகப் பயன்​படுத்​தக் கூடும்.

எதிர்க்​கட்​சிகளின் சிக்​கல்​கள் அதோடு முடிந்​து​விட​வில்​லை. பெண்​களுக்​கான இட ஒதுக்​கீட்​டுக்​குள் ஒபிசி இட ஒதுக்​கீடு கோரிக்​கைக்​கும் பாஜக தனது வாதங்​களைத் தயா​ராக வைத்​துள்​ளது.

பெண்​களுக்​கான இடஒதுக்​கீட்​டுக்​குள் முஸ்​லிம்​களுக்​கான இட ஒதுக்​கீடு கோரிக்​கையை மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா மக்​களவை​யில் நிராகரித்​தார். மத அடிப்​படை​யில் முஸ்​லிம்​களுக்கு இடஒதுக்​கீடு அளிக்க வேண்​டும் என்​பது அரசி​யலமைப்பு சட்​டத்​துக்கு எதி​ரானது என்று அவர் கூறி​னார்.

அதே​போல் ஒபிசி பெண்​களுக்​கான இட ஒதுக்​கீடு தொடர்​பாக, சாதி​வாரி கணக்​கெடுப்​பு, அதன்​பிறகு மக்​களவை​யில் பரிசீலனை போன்ற நடை​முறை​களுக்​குப் பிறகு முடி​வெடுக்​கலாம் என்று அமித் ஷா உறுதி அளித்​துள்​ளார். பாஜக​வின் இந்த வாதங்​களை எதிர்க்​கட்​சிகள் சமாளிப்​பது கடின​மாக இருக்​கும்.

எனவே, மகளிர் இடஒதுக்​கீடு மசோதா நிறைவேற​வில்லை என்​றாலும், அது பாஜக​வின் அரசி​யல் செயல் திட்​டத்​தின் ஒரு முக்​கிய அங்​க​மாகவே மாறி​யுள்​ளது. தேர்​தலுக்​காக எஞ்சியிருக்​கும் பிரச்​சார நாட்​களில், பாஜக தனது உத்​தி​யை திறம்​படப்​ பயன்​படுத்​து​வதில்​ அதன்​ வெற்​றி அடங்​கியுள்​ளது.

SCROLL FOR NEXT