சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் ஊர்க்காவல் படையின் 63-வது நிறுவன தினம் நேற்று கொண்டாடப்பட்டது.
சிம்லாவில் நடைபெற்ற விழாவில் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு பேசியதாவது: பெண்கள் மேம்பாட்டு திட்டங்களுக்கு இமாச்சல் அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. தீயணைப்பு படையில் விரைவில் பெண்கள் சேர்க்கப்படுவார்கள். இதற்காக, தீயணைப்பு துறை ஆள்சேர்ப்பு விதிகளில் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.
ஊர்க்காவல் படையில் ஆள்சேர்ப்பு நடவடிக்கை விரைவில் தொடங்கும். இவ்வாறு முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு கூறினார்.