இந்தியா

ஆந்திரா​வில் தடியடி திருவிழா பெண் உயிரிழப்​பு, 100 பேர் காயம்

செய்திப்பிரிவு

கர்​னூல்: ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்​டத்​தில் ஆண்​டு​தோறும் நடை​பெறும் தடியடி திருவிழாவில் பங்​கேற்ற ஒரு பெண் பரிதாபமாக உயி​ரிழந்​தார். நூற்​றுக்​கும் அதி​க​மானோர் தலையில் பலத்த காயமடைந்து மருத்​து​வ​மனை​களில் சிகிச்சை பெற்று வரு​கின்​றனர்.

ஆந்​திர மாநிலம், கர்​னூல் மாவட்​டம், தேவரகட்டா பகு​தி​யில் பல ஆண்​டு​களாக இரு மலை​வாழ் கிராமங்​களைச் சேர்ந்த மக்​கள் ‘தடியடி திருவிழா’ எனும் பாரம்​பரிய விழாவை நடத்தி வருகின்றனர். இதில் இரு கிராம மக்​களும் இரவில் ஓரிடத்​தில் கூடி, இரண்டு பிரி​வின​ராகப் பிரிந்து விடு​வர். இவர்​களில், மலை மீதுள்ள அம்​மன் சிலையை யார் கொண்​டு​போய் தங்​கள் கிராமத்தில் வைக்​கிறார்​களோ, அவர்​களின் ஊரில்​தான் அடுத்த ஆண்டு வரை அம்​மன் சிலை இருக்​கும்.

சிலையை மற்​றொரு கிராமத்​துக்​குக் கொண்டு செல்ல விடா​மல், கட்​டை, கற்​களால் அடித்​துக்​கொண்​டும், ஒரு​வரை ஒரு​வர் தாக்கிக்​கொண்​டும் தடுப்​பார்​கள். விடிய விடிய நடை​பெறும் இந்த விபரீத திருவிழாவில் பெரிய​வர்​கள், சிறிய​வர்​கள், ஆண்​கள், பெண்​கள் என எவ்​வித வேறு​பாடும் இன்றி அனை​வரும் கலந்​து​கொள்​வார்​கள்.

தடியடி நடப்​ப​தால் பலரது தலை​யில் பலத்த காயம் ஏற்​படும். ஆயினும், அடுத்த ஆண்​டும் இதே ஆக்​ரோஷத்​துடன் விழா நடைபெறும். இந்த விழாவுக்கு பலத்த போலீஸ் பாது​காப்பு போடப்​பட்​டிருந்​தும், ஒரு​வரை ஒரு​வர் தடிகளால் தாக்கிக்கொள்வது மட்​டும் மாற​வில்​லை. இம்​முறை இவ்​வாறு தாக்​கிக்​கொண்​ட​தில் ஒரு பெண் உயி​ரிழந்​தார். நூற்​றுக்​கும் மேற்பட்​டோர் படு​கா​யம் அடைந்து கர்​னூல் அரசு மருத்துவமனையில் சிகிச்​சை பெற்று வருகின்றனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT