குழந்தைகளுக்குக்கூட பாதுகாப்பில்லை: உதயநிதி கண்டனம்

குழந்தைகளுக்குக்கூட  பாதுகாப்பில்லை: உதயநிதி கண்டனம்
Updated on: 
1 min read

சென்னை: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ்தள பதிவில் கூறியிருப்பதாவது: செஞ்சி அருகே 7 வயது சிறுமி காணாமல் போய் இன்றோடு 11 நாட்கள் ஆகியும், அச்சிறுமியைக் கண்டுபிடிக்க முடியாமல் இந்த அரசு திணறிக்கொண்டு இருப்பது கடும்கண்டனத்துக்குரியது.

குழந்தையைக் கண்டுபிடிக்காத அரசையும், காவல்துறையையும் கண்டித்து திமுக சார்பில் தரணிவேந்தன் எம்.பி தலைமையில் செஞ்சி ஆலம்பூண்டியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டையிலும் இதேபோல் ஒரு குழந்தை காணாமல் போய் சுமார் ஒரு மாதம் ஆகியும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த டம்மி ஆட்சியில் பச்சை குழந்தைகளுக்குக்கூட பாதுகாப்பில்லை என்ற நிலையில்தான் தமிழகம் இருக்கிறது.

முதல்வர் தன் ரீல்ஸ் மோகத்தைத் தள்ளிவைத்துவிட்டு, பிள்ளையைத் தொலைத்து தவிக்கும் அந்தக் குடும்பத்தின் வலியை உணர்ந்து, காணாமல்போன குழந்தையை உடனே கண்டறிய ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.

குழந்தைகளுக்குக்கூட  பாதுகாப்பில்லை: உதயநிதி கண்டனம்
தமிழக அரசு துரிதமாகச் செயல்பட்டு சூப்பர் எல் நினோ பாதிப்பை தடுக்க வேண்டும்: சவுமியா அன்புமணி வலியுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in