இந்தியா

குவைத்தில் இருந்து முத்தலாக் கூறியதாக பெண் புகார்

செய்திப்பிரிவு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் பன்ஸ்வாரா மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் மகளிர் காவல் நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை புகார் அளித்தார்.

அதில், குவைத்தில் உள்ள தனது கணவர் கடந்த மே 17ம் தேதி தனக்கு வாடஸ்-அப் மூலம் முத்தலாக் கூறி திருமண உறவை முடித்துக் கொண்டதாக கூறியுள்ளார். இது குறித்து மகளிர் காவல் நிலைய அதிகாரி ஊர்மிளா கூறுகையில், “பெண்ணின் கணவர் ஆஷிக் இக்பால் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளோம்" என்றார்.

SCROLL FOR NEXT