காங்கிரஸ் பெண் எம்​எல்ஏ ரம்யா ஹரி​தாஸ்

 
இந்தியா

வாட்ஸ்அப் பதிவால் வெடித்த உட்கட்சி மோதல்: கேரளாவில் காங். பெண் எம்எல்ஏ மீது தாக்குதல்

7 பேர் மீது வழக்குப்பதிவு

செய்திப்பிரிவு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திரு​வனந்​த​புரம் மாவட்​டம் சிரயின்​கீழு பகு​தி​யில், வட்​டார பஞ்​சா​யத்​துக் கூட்​டத்​தில் காங்கிரஸ் பெண் எம்​எல்ஏ ரம்யா ஹரி​தாஸின் உதவி​யாளர் பாளயம் பிரதீப் பங்​கேற்​றுள்​ளார். இதுகுறித்து கட்சி நிர்​வாகி சஜாத் வாட்ஸ்​அப் குழு​வில் கேள்வி எழுப்​பிய​தால் உட்​கட்​சிப் பூசல் வெடித்தது.

இந்த வாட்​ஸ்​அப் பதிவு விவ​காரம் தொடர்​பாக, நேற்று முன்​தினம் இரவு எம்​எல்ஏ ரம்யா ஹரி​தாஸுக்​கும் உள்​ளூர் கட்​சித் தொண்​டர்​களுக்​கும் இடையே ஏற்​பட்ட கடுமை​யான வாக்​கு​வாதம் கைகலப்​பாக மாறியது. இதில் காயமடைந்த ரம்யா ஹரி​தாஸ், உடனடி​யாகச் சிர​யின்​கீழு தாலுகா மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டுச் சிகிச்சை பெற்​றார்.

இதுகுறித்து எம்​எல்ஏ ரம்யா ஹரி​தாஸ் கூறும்​போது, “வங்​கித் தேர்​தலில் உட்​கட்​சிப் பூசல் வராமல் இருக்க நான் எந்​தப் பிரச்​சா​ரத்​துக்​கும் செல்​ல​வில்​லை. ஆனால், சஜாத் சமூக வலை​தளங்​களில் தொடர்ந்து என்னை அவதூறாகப் பேசி​னார். இதுகுறித்து பேசித் தீர்க்​கவே அவர் அழைப்​பின் பேரில் அவரது வீட்​டுக்​குச் சென்​றேன்” என்​றார்.

மேலும் அங்கு வந்த மாவட்ட பஞ்​சா​யத்து உறுப்​பினர் சஜித் முத்​தம்​பலம் உட்பட சிலர் தன்​னிடம் மிக​வும் கோப​மாக நடந்​து​கொண்​டதுடன், ‘வந்த வழியே திரும்​பிச் செல்ல முடி​யாது’ எனத் தன்னை மிரட்​டித் தாக்​குதல் நடத்​தி​ய​தாக ரம்யா குற்​றம் சாட்​டி​னார்.

ஆனால், இந்​தக் குற்​றச்​சாட்​டு​களை சஜாத் மறுத்துள்ளார்.இச்​சம்​பவம் தொடர்​பாக எம்​எல்ஏ அளித்த புகாரின் பேரில் சஜித், சஜாத் உள்​ளிட்ட 7 பேர் மீது காவல் துறை வழக்​குப் பதிவு செய்​துள்​ளது. அதே​போல சஜாத் அளித்த புகாரின் பேரிலும் வழக்​குப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்​கப்​பட்டு வரு​கிறது. இதையடுத்​து, இரு தரப்​பினரை​யும் அழைத்து பேச கேரள காங்கிரஸ் தலைமை முடிவு செய்​துள்​ளது.

SCROLL FOR NEXT