இந்தியா

மேற்கு வங்கம், அசாம், கேரளாவில் யார் ஆட்சி?

செய்திப்பிரிவு

மேற்கு வங்​கம், அசாம், கேரளா ஆகிய மாநிலங்​களில் சட்டப்பேரவைத் தேர்​தல் வாக்கு எண்​ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. பகல் 11 மணிக்​குள் தொகுதி முன்​னணி நிலவரங்​கள் தெரிய​வரும்.

மேற்கு வங்​கத்​தில் முதல்​வர் மம்தா தலை​மையி​லான திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சி​யின் ஆட்சி நடை​பெற்று வரு​கிறது. தொடர்ந்து 15 ஆண்​டு​களாக முதல்​வ​ராக உள்​ளார் மம்தா பானர்​ஜி. அதே ​நேரத்தில் அங்கு திரிண​மூல் காங்​கிரஸுக்கு பாஜக கடும் சவாலை அளித்து வரு​கிறது. இம்​முறை ஆட்​சி​யமைக்​கும் அளவுக்கு தொகுதி​களை பாஜக கைப்​பற்​றும் என்று வாக்கு கணிப்​பு​கள் தெரிவிக்கின்​றன.

எனவே, இங்கு ஆட்​சி​யமைப்​ப​தில் இரு கட்​சிகள் இடையே பலத்த போட்டி இருக்​கும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. மேற்கு வங்கத்தில் மொத்​தம் 294 பேர​வைத் தொகு​தி​கள் உள்​ளன. அசாம் மாநிலத்​தில் முதல்​வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலை​மை​யில் பாஜக ஆட்சி நடை​பெற்று வரு​கிறது. இங்கு மொத்​தம் 126 இடங்கள் உள்​ளன. இந்​தத் தேர்​தலில் பாஜக தலை​மையி​லான தேசிய ஜனநாயகக் கூட்​டணி 85 முதல் 100 இடங்​களைக் கைப்பற்றும் என்று கருத்​துக்​கணிப்​பு​கள் வெளி​யாகி​யுள்​ளன.

தொடர்ந்து அசாமில் 3-வது முறை​யாக பாஜக தலை​மையி​லான தேசிய ஜனநாயகக் கூட்​டணி ஆட்​சி​யமைக்​கும் என்று எதிர்பார்க்கப்​படு​கிறது. கேரள சட்​டப்​பேர​வை​யில் 140 தொகுதிகள் உள்​ளன. தற்​போது முதல்​வர் பின​ராயி விஜயன் தலை​மையி​லான இடது​ சாரி ஜனநாயக முன்​னணி (எல்​டிஎஃப்) அங்கு ஆட்சி செய்து வரு​கிறது. 2016 முதல் தொடர்ந்து 2 முறை எல்​டிஎஃப் கூட்​டணி ஆட்​சி​யில் உள்​ளது.

எனவே, 3-வது முறை​யாக ஆட்​சி​யைக் கைப்​பற்ற எல்​டிஎஃப் முயன்று வரு​கிறது. கருத்​துக்​கணிப்​பு​களில் எல்​டிஎஃப் கூட்​டணி 60 முதல் 65 இடங்​களைக் கைப்​பற்​றும் எனத் தெரிவிக்​கப்​பட்​டுள்ளது. அதே​ நேரத்​தில் காங்​கிரஸ் தலை​மையி​லான ஐக்​கிய ஜனநாயக முன்​னணி (​யுடிஎஃப்) ஆளும் மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் அரசுக்கு கடும் சவாலை அளித்து வரு​கிறது. இந்​தத் தேர்​தலில் பெரும்பான்மை பெற 71 இடங்​கள் தேவை. கருத்​துக்​ கணிப்பு முடிவு​களில் காங்​கிரஸ் தலை​மையி​லான யுடிஎஃப் கூட்​டணி 70 முதல் 75 இடங்​களைக் கைப்​பற்​றும்​ என்​று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT