இந்தியா

ராகுலுடன் இருப்பவர்கள் யார்? - மத்திய அமைச்சர் கிரிராஜ் வெளியிட்ட புகைப்படத்தால் சர்ச்சை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தியுடன் இருப்​பவர்​கள் யார்? என்று கேட்டு மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் வெளி​யிட்​டுள்ள புகைப்​படத்​தால் சர்ச்சை ஏற்பட்டுள்​ளது.

மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்​தி​யின் வெளிநாட்டுப் பயணம் குறித்து பாஜக அடிக்​கடி கேள்வி எழுப்பி வரு​கிறது. மத்​திய அமைச்​சர் கிரி​ராஜ் சிங் எக்ஸ் வலை​தளப் பக்கத்​தில் நேற்று ஒரு புகைப்​படத்தை வெளி​யிட்​டார்.

அதில், ராகுல் காந்தி தொப்பி அணிந்து காணப்​படு​கிறார்; அவருடன் தலை​யில் துணி மற்​றும் குளிர் கண்​ணாடி அணிந்த ஒரு பெண்ணும், ஒரு சிறு​வனும் படகில் உள்​ளனர். நீல நிற முழுக்கை நீச்​சல் உடை​யில் இருக்​கும் அந்த சிறு​வன் ராகுலுக்​கும் அந்​தப் பெண்​ணுக்​கும் இடை​யில் அமர்ந்​திருக்​கிறான்.

அமைச்​சர் கிரி​ராஜ் சிங், “ராகுல் ஜி.. இந்த புகைப்​படம் எங்கே எடுக்​கப்​பட்​டது? எப்​போது எடுக்​கப்​பட்​டது? இந்த புகைப்​படத்​தில் உங்​களு​டன் இருக்​கும் நபர்​கள் யார்? இதை நான் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்​கிறேன்” என்று தெரி​வித்​திருந்​தார்.

இதுகுறித்து காங்​கிரஸ் செய்​தித் தொடர்​பாளர் சுப்​ரியா ஸ்ரீநடே கூறும்​போது, “இந்​தப் படத்​தில் இருப்​பவர்​கள் ராகுல் காந்​தி​யின் நண்​பரின் மனை​வி​யும் குழந்​தை​யும் ஆவர். அவர்​கள் குடும்பத்துடன் விடு​முறையைக் கழிக்​கச் சென்​றிருந்​தனர்.

அந்த நண்​பர் இந்​தப் படத்​தில் இல்​லை. ஒரு பெண்​ணை​யும் ஆணை​யும் ஒன்​றாகப் பார்க்​கும்​போது மோச​மான எண்​ணங்​களை மட்​டுமே கொண்​டிருக்​கக்​கூடிய நபர் நீங்​கள். உங்​கள் சொந்த விரக்​தி​கள் உங்​களை ஆதிக்​கம் செலுத்த அனு​ம​திக்​காதீர்​கள். இது கண்டிக்கத்​தக்​கது” என்​றார்.

இதுகுறித்து இந்​திய வெளி​நாடு வாழ் காங்​கிரஸ் (ஐஓசி) அமைப்பின் சமூக ஊடகப் பொறுப்​பாளர் அவி தாண்​டியா கூடுதல் விவரங்​களை அளித்​துள்​ளார். அவர் கூறும்​போது “ராகுல் காந்தியின் இந்​தப் புகைப்​படம் டெக்​சாஸில் உள்ள ரே ராபர்ட்​ஸ் ஏரியில் எடுக்​கப்​பட்​டது. இது உண்​மையா இல்​லையா என்​பதை மத்​திய அமைச்​சர் கிரி​ராஜ் சிங்​ நீங்​களே தெரிந்​து​கொள்​ளலாம்​” என்​றார்​.

SCROLL FOR NEXT