எம்எல்ஏ ஹுமாயூன் கபிர்
கொல்கத்தா: மேற்குவங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ ஹுமாயூன் கபிர் முர்சிதாபாத் மாவட்டத்தில் பாபர் மசூதி போன்ற கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டினார். இதையடுத்து அவர் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்நிலையில் அவர் ஜனதா உன்னயன் என்ற பெயரில் புதிய கட்சியை நேற்று தொடங்கினார். இதுகுறித்து பெலதங்காவில் அவர் கூறும்போது, ‘‘எனது கட்சி சார்பில் 8 வேட்பாளர்கள் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தலில் நிறுத்தப்படுவர். நான் ரெஜிநகர் மற்றும் பெலதங்கா தொகுதியில் போட்டியிடுவேன்’’ என்றார்.