இந்தியா

மேற்கு வங்கத்தின் பால்டா தொகுதியில் மே 21-ல் மறுதேர்தல்

செய்திப்பிரிவு

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் பால்டா சட்​டப்​பேர​வைத் தொகு​தி​யில் நடை​பெற்ற வாக்​குப்​ ப​தி​வின் போது, ஜனநாயக நெறி​முறை​களுக்கு மாறாக பல்​வேறு முறை​கேடு​கள் அரங்​கேறியதைத் தொடர்ந்​து, அங்​குள்ள அனைத்து 285 வாக்​குச் சாவடிகளி​லும் மறு​தேர்​தல் நடத்த இந்​தி​யத் தேர்​தல் ஆணை​யம் உத்​தர​விட்​டுள்​ளது.

அதன்​படி, மே 21-ம் தேதி மீண்​டும் வாக்​குப்​ப​திவு நடை​பெறும்; மே 24-ம் தேதி வாக்​கு​கள் எண்​ணப்​படும் என்று அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. இதனால் மேற்கு வங்கத்தில் இன்று 293 தொகுதிகளுக்கு மட்டும் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​களில் கறுப்பு நிற டேப் ஒட்டி வாக்குகளைத் தடுத்​தது முதல், வாக்​காளர்​களைக் கண்​டறிய வாசனைத் திர​வி​யங்​களைப் பயன்​படுத்​தி​யது வரை பல்​வேறு முறை​கேடு​கள் குறித்த முக்​கிய தகவல்​களை தேர்​தல் ஆணை​யம் அம்​பலப்​படுத்​தி​யுள்​ளது.

பால்டா தொகு​தி​யில் முறை​யான வாக்​காளர்​களை வாக்​களிக்க விடா​மல் தடுத்​ததோடு, வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​களில் உள்ள குறிப்​பிட்ட வேட்​பாளர்​களின் சின்​னங்​களுக்கு நேராக கறுப்பு நிற டேப் ஒட்​டப்​பட்​டு, அந்​தப் பொத்​தான்​களை அழுத்த முடி​யாத​படி முடக்​கிய​தாக புகார்​கள் எழுந்​தது.

மேலும், அதிர்ச்​சி​யூட்​டும் தகவலாக, வாக்​குப்​ப​திவு இயந்​திரத்​தின் பொத்​தான்​களில் வாசனைத் திர​வி​யம் மற்​றும் மையைப் பூசி, வாக்​களித்​து​விட்டு வரும் வாக்​காளர்​களின் விரல்​களில் ஏற்​படும் வாசனை மற்​றும் நிறத்தை வைத்து அவர்​கள் யாருக்கு வாக்களித்தார்​கள் என்​ப​தைக் கண்​டறி​யும் சட்​ட​விரோதச் செயல்களும் பல வாக்​குச் சாவடிகளில் அரங்​கேறி​யுள்​ளன. இது வாக்​களிப்​ப​தன் ரகசி​யத் தன்​மையை முற்​றி​லு​மாகச் சிதைப்பதாக அமைந்​த​தாக தேர்​தல் ஆணை​யம் தெரிவித்துள்ளது.

மேலும், தொகுதி முழு​வதும் பரவலாக வாக்​குச் சாவடிகள் கைப்​பற்​றப்​பட்​டதை​யும், உண்​மை​யான வாக்​காளர்​கள் மிரட்​டப்​பட்​டுத் திருப்பி அனுப்​பப்​பட்​டதை​யும் தேர்​தல் பார்​வை​யாளர்​கள் உறுதி செய்​துள்​ளனர். தேர்​தல் அலு​வலர்​களே வாக்​காளர்​களுக்கு வழிகாட்​டு​வது போல வாக்​குப்​ப​திவு அறைக்​குள் நுழைந்து முறை​கேடு​களி​லும் ஈடு​பட்​டது வீடியோ பதிவு​கள் மூலம் தெரியவந்துள்ளது.

வாக்​குச் சாவடிகளில் பொருத்​தப்​பட்​டிருந்த சிசிடிவி கேம​ராக்​கள், வாக்​குப்​ப​திவு மும்​முர​மாக நடை​பெற்ற நேரங்​களில் திட்டமிட்டபடி அணைத்து வைக்​கப்​பட்​டிருந்​தன. பல இடங்​களில் வீடியோ பதிவு​கள் மாய​மாகி​யுள்ளன அல்​லது தொடர்​பில்​லாத காட்​சிகள் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளன. இதன் மூலம் முறைகேடுகளை மறைக்​கத் திட்​ட​மிட்​டது உறு​தி​யாகி​யுள்​ளது.

ஒரே நபர் பலமுறை வாக்​குச் சாவடிக்​குள் நுழைந்து கள்ள ஓட்டுகளைப் பதிவு செய்​தது, ரகசி​யக் காப்பு விதி​களை மீறி ஒரே நேரத்​தில் பல நபர்​கள் வாக்​குப்​ப​திவு இயந்​திரத்​தின் அருகே நின்றது போன்ற அடுக்​கடுக்​கான புகார்​களைத் தொடர்ந்​து, பால்டா தொகு​தி​யின் ஒட்​டுமொத்​தத் தேர்​தல் முடிவு​களும் நம்பகத்​ தன்​மையை இழந்​து​விட்​ட​தாக ஆணை​யம் கருதுகிறது.

இதன் காரண​மாகவே. மேற்கு வங்க மாநிலத் தலை​மைத் தேர்​தல் அதி​காரி​யின் பரிந்​துரையை ஏற்​று, பால்டா தொகு​தித் தேர்​தலை ரத்து செய்து முழு​மை​யான மறு​தேர்​தலை நடத்​தும்​ முடிவுக்​கு வந்த​தாக தேர்​தல்​ ஆணை​யம்​ தெரி​வித்​துள்​ளது.

SCROLL FOR NEXT