இந்தியா

மேற்கு வங்கத்தில் ரயில்-பேருந்து மோதல்: 5 பேர் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் முர்​ஷி​தா​பாத் பகு​தி​யிலுள்ள ரயில்வே கிராஸிங் வழி​யாக ஒரு பள்​ளிப் பேருந்து நேற்று காலை சென்​றது. அப்​போது அந்த வழி​யாக வந்த பயணி​கள் ரயில், பேருந்து மீது மோதி​யது. இதில் 3 பள்​ளிக் குழந்​தைகள் உட்பட 5 பேர் உயி​ரிழந்​தனர். காயமடைந்​தவர்​கள் அரு​கிலுள்ள மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்​டுள்​ளனர். இந்த விவ​காரத்​தில் ரயில்வே கிராஸிங் கேட்​மேன் கைது செய்​யப்​பட்​டு உள்​ளார்.

நேற்று காலை 6.40 மணிக்கு இந்த விபத்து நடந்​துள்​ளது. ரயில்வே கிராஸிங்​கில் கேட் திறந்​திருந்​த​தால் பள்ளி பேருந்து மீது ரயில் மோதி​யுள்​ளது தெரிய​வந்​துள்​ளது. இதுதொடர்​பாக விசாரணை நடக்கிறது.

SCROLL FOR NEXT