உச்ச நீதி​மன்​றத்​தில் மம்தா பானர்ஜி

 
இந்தியா

‘எஸ்ஐஆர் விவகாரத்தில் மேற்கு வங்கத்துக்கு குறி’ - உச்ச நீதிமன்றத்தில் முதல்வர் மம்தா வாதம்

செய்திப்பிரிவு

ஏபுதுடெல்லி: எஸ்​ஐஆர் விவ​காரத்​தில் மேற்​கு​வங்க மாநிலம் குறிவைக்​கப்​பட்​டுள்​ளது, அங்கு ஜனநாயகத்தை காக்க வேண்​டும் என்று உச்ச நீதி​மன்​றத்​தில் அம்மாநில முதல்​வர் மம்தா வாதாடினார்.

இது தொடர்​பாக உச்ச நீதி​மன்​றத்​தில் மம்தா பானர்ஜி தாக்​கல் செய்​துள்ள மனு​வில், ‘‘மக்​கள் பிர​தி​நி​தித்​துவ சட்​டத்​துக்கு எதி​ராக வாக்​காளர் சிறப்பு தீவிர திருத்​தப் பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்றன. அதற்கு தடை விதிக்க வேண்​டும், தற்​போதுள்ள வாக்​காளர் பட்​டியலின் அடிப்​படை​யிலேயே தேர்​தலை நடத்த தேர்​தல் ஆணை​யத்​திற்கு உத்​தர​விட வேண்​டும்’’ என தெரி​வித்​திருந்​தார்.

          

இந்த மனு தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலை​மையி​லான அமர்வு முன்பு நேற்று விசா​ரணைக்கு வந்தது. அப்போது மேற்கு வங்க முதல்​வர் மம்தா பானர்ஜி ஆஜராகி வாதிட்​டார். அப்​போது அவர் கூறிய​தாவது:

வாக்​காளர் பட்​டியலில் பெயர்​களை நீக்​கு​வதற்​காக எஸ்​ஐஆர் பணியை தேர்​தல் ஆணை​யம் நடத்தி வரு​கிறது. இந்த விவ​காரத்​தில் தேர்​தல் ஆணை​யத்​துக்கு கடிதம் எழு​தி​யும் பதில் கிடைக்​க​வில்​லை. எஸ்ஐஆர் பணி​யின்போது ஆதார் அட்​டையை ஏற்க உச்ச நீதி​மன்​றம் பிறப்​பித்த உத்​தரவை பிற மாநிலங்​களில் பின்​பற்​றி​னாலும் மேற்கு வங்​கத்​தில் தேர்​தல் ஆணை​யம் பின்​பற்​ற​வில்​லை.

சட்​டப்​பேரவை தேர்​தலை கருத்​தில் கொண்டு மேற்கு வங்​கத்தை குறி வைத்​துள்​ளார்​கள். 2 ஆண்​டு​கள் செய்ய வேண்​டிய எஸ்ஐஆர் பணியை 2 மாதங்​களிலேயே செய்ய முற்​படு​வது ஏன்? அது​வும் பண்​டிகை காலங்​களில் அறு​வடை நாட்​களில் மக்​கள் நகரங்​களில் இல்​லாத போது அவர்​களுக்கு தொந்​தரவு அளிக்​கும் வகை​யில் நோட்​டீசை தேர்​தல் ஆணை​யம் அனுப்பி வரு​கிறது.

எஸ்ஐஆர் பணியை மேற்​கொண்​ட​தில் தேர்​தல் ஆணை​யத்​தின் தொல்லை தாங்​காமல் நூற்​றுக்​கும் மேற்​பட்​டோர் இறந்​துள்​ளனர். வாக்​குச்​சாவடி நிலை அதி​காரி​களின் அதி​காரத்தை குறைக்​கும் வகை​யில் பாஜகவை சார்ந்த எட்​டா​யிரம் பெயரை மைக்ரோ பார்​வை​யாளர்​களாக தேர்​தல் ஆணை​யம் நியமித்​துள்​ளது. இதனால் 58 லட்​சம் பேரின் பெயர்​கள் வாக்​காளர் பட்​டியலில் இருந்து நீக்​கப்​பட்​டுள்​ளன. மேற்​கு​வங்க மக்​களை அச்​சுறுத்த தேர்​தல் ஆணை​யம் நினைக்​கிறது. இவ்​வாறு அவர் வாதிட்​டார்.

தேர்​தல் ஆணை​யத்​தின் சார்​பில் மூத்த வழக்​கறிஞர் ராகேஷ் துவிவே​தி, டி எஸ் நாயுடு ஆஜராகி வாதிட்டனர். இருதரப்பு வாதங்​களை​யும் பதிவு செய்து கொண்ட உச்ச நீதி​மன்​றம் மம்தா மனுவுக்கு பதில் அளிக்க ஆணை​யத்​திற்கு உத்​தர​விட்டார்.

SCROLL FOR NEXT