இந்தியா

“பொருளாதாரம் மட்டுமல்ல செயலிழந்த சமூகமாகவும் மாறிக்கொண்டிருக்கிறோம்” - ராகுல் காந்தி விமர்சனம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: காங்​கிரஸ் மூத்த தலை​வர் ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்​தில் நேற்று கூறி​யுள்​ள​தாவது:

உன்​னாவ் பெண்ணை சீரழித்த குற்​ற​வாளிக்கு (முன்​னாள் பாஜக எம்​எல்ஏ செங்​கர்) ஜாமீன் வழங்​கப்​பட்​டிருப்​பது மிக​வும் ஏமாற்​றமளிக்​கிறது. குறிப்​பாக பாதிக்​கப்​பட்ட பெண் மீண்​டும் மீண்​டும் துன்​புறுத்​தப்​பட்​டு, அச்​சத்​தின் நிழலில் வாழ்ந்து கொண்​டிருக்​கும்​போது ஜாமீன் வழங்​கப்​பட்​டுள்​ளது.

இது என்ன வகை​யான நீதி? நாம் ஒரு செயலிழந்த பொருளா​தா​ர​மாக மட்​டும் மாற​வில்​லை; இது​போன்ற மனி​தாபி​மானமற்ற சம்​பவங்​களால் நாம் ஒரு செயலிழந்த சமூக​மாக​வும் மாறிக்​கொண்​டிருக்​கிறோம்.

ஜனநாயகத்​தில், மாற்​றுக்​குரல் எழுப்​புவது உரிமை. அதை அடக்​கு​வது குற்​றம். பாதிக்​கப்​பட்​ட​வருக்கு மரி​யாதை​யும், பாது​காப்​பும், நீதி​யும் கிடைக்க வேண்​டுமே தவிர கையறு நிலை, பயம் மற்​றும் அநீதி அல்ல.

குல்​தீப் சிங் செங்​கருக்கு உயர் நீதி​மன்​றம் வழங்​கிய ஜாமீனுக்கு எதி​ராக டெல்​லி​யில் போராட்​டத்​தில் ஈடு​பட்ட பாலியல் வன்​கொடுமை​யால் பாதிக்​கப்​பட்ட அந்​தப் பெண்ணை மரி​யாதை​யுடன் நடத்த வேண்​டும். அவருக்கு அநீ​தி​யும் அச்​ச​மும் ஏற்​படுத்​து​வதற்​குப் பதிலாக நீதி உறுதி செய்​யப்பட வேண்​டும். இவ்​வாறு அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.

SCROLL FOR NEXT