இந்தியா

மீன் உணவுக்குத் தடை விதிக்க மாட்டோம்: மம்தாவின் பிரச்சாரத்துக்கு மீனை கையில் ஏந்தியபடி பாஜக வேட்பாளர் பதிலடி

செய்திப்பிரிவு

கொல்கத்தா: மேற்கு வங்க மாநில சட்​டப் பேர​வைக்கு வரும் ஏப்​ரல் 23, 29-ம் தேதி​களில் 2 கட்​ட​மாக தேர்​தல் நடை​பெறவுள்​ளது. இதையொட்டி ஆளும் திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சி, பாஜக உள்​ளிட்ட கட்​சிகள் தீவிர தேர்​தல் பிரச்​சா​ரத்​தில் ஈடு​பட்டு வரு​கின்​றன.

இந்​நிலை​யில் தேர்​தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்​சிக்கு வந்​தால், மேற்கு வங்​கத்​தில் மீன் உணவுக்கு தடை விதிக்​கப்​படும் வாய்ப்​புள்​ளது என்று திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சித் தலை​வர் மம்தா பானர்ஜி பிரச்​சா​ரம் செய்து வரு​கிறார். மேலும், பாஜக​வினர் வெளி மாநிலங்​களைச் சேர்ந்​தவர்​கள். அவர்​களுக்கு இங்​குள்ள மீ்ன் உணவு கலாச்​சா​ரம் தெரி​யாது என்​றும் முதல்​வர் மம்தா பேசி வரு​கிறார்.

          

‘மீன் மற்​றும் சாதம்’ என்​பது மேற்கு வங்க மக்​களின் உணவு பழக்​கம் மட்​டுமல்ல, அது அவர்​களின் அடை​யாள​மாக​வும் கருதப்​படு​கிறது. துர்கை பூஜை​யில் கூட அசைவ உணவு பக்​தர்​களுக்கு வழங்​கப்​படு​கிறது. அங்கு அனைத்து மக்​களும் மீன் உணவை சாப்​பிட்டு வரு​கின்​றனர். இந்​நிலை​யில்​தான் மீன் உணவுக்கு பாஜக தடை விதிக்​கும் என்ற பிரச்​சார அஸ்​திரத்தை முதல்​வர் மம்தா பானர்ஜி கையில் எடுத்​துள்​ளார். இதைத் தொடர்ந்து மேற்கு வங்​கத்​தில் நடை​பெறவுள்ள சட்​டப்​பேரவை தேர்​தலில் இந்த உணவு அரசி​யல் ஒரு முக்​கிய பேசுபொருளாக மாறி​யுள்​ளது.

ஆளும் திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சி, பாஜக ஆட்​சிக்கு வந்​தால் மேற்கு வங்க மக்​களின் அசைவ உணவு பழக்​கத்​தில் தலை​யிடும் என்​றும், ‘சைவ உணவை’ திணிக்க முயலும் என்​றும் விமர்​சித்து வரு​கிறது. இதையடுத்து திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சி​யின் பிரச்​சா​ரத்​துக்கு பதிலடி கொடுக்​கும் வகை​யில் பாஜக தலை​வர்​கள் திட்​டம் தீட்​டி​யுள்​ளனர்.

இதைத் தொடர்ந்​து, பாஜக வேட்​பாளர்​கள் தாங்​கள் மீன் மற்​றும் சாதம் சாப்​பிடும் காட்​சிகளை படம்​பிடித்து அதை சமூக வலை​தளங்​களில் பகிர்ந்து வரு​கின்​றனர். குறிப்​பாக, பிதான்​ நகர் தொகுதி பாஜக வேட்​பாளர் டாக்​டர் சரத்​வத் முகோ​பாத்​யாய், கட்லா மீனை கையில் ஏந்​தி​யபடி வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்​தார்.

அப்​போது, அவர், “பாஜக ஒரு​போதும் மீன் அல்​லது இறைச்​சிக்​குத் தடை விதிக்​காது” என்​றும் அவர் உறு​தி​யளித்​தார்.

மேற்கு வங்க கலாச்​சா​ரத்​தில் மீன் என்​பது சுப காரி​யங்​களின் அடை​யாளம் என்​ப​தால், மக்​களின் உணர்​வு​களைக் கவர இரு கட்​சிகளும் மீன் அரசி​யலில் தீவிர​மாக ஈடு​பட்​டுள்​ளன. இதை புரிய வைக்​கும் வித​மாக வீடு வீடாக சென்று தீவிர பிரச்​சா​ரத்​தில் ஈடு​படு​மாறு பாஜக தலை​வர்​கள், வேட்​பாளர்​களுக்​கு கட்​சி மேலிடம்​ உத்​தர​வு பிறப்​பித்​துள்​ளது.

SCROLL FOR NEXT