இந்தியா

உம்மிடி எத்திராஜ் மறைவுக்கு குடியரசு துணைத் தலைவர் சிபிஆர், பிரதமர் மோடி, ஆளுநர் அர்லேகர் இரங்கல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: உம்மிடி பங்​காரு ஜூவல்​லர்ஸ் நிறு​வனத்​தின் மூத்த குடும்ப உறுப்​பினரும் இந்​தி​யாவின் வரலாற்​றுச் சிறப்​புமிக்க செங்​கோலை வடிவ​மைத்​தவரு​மான உம்​மிடி எத்​திராஜ் சென்​னை​யில் நேற்று காலமானார்.

சென்​னை​யில் கடந்த 1900 முதல் இயங்கி வரும் பாரம்​பரியமிக்க தங்​கம், வைர நகைக்​கடை உம்​மிடி ஜூவல்​லர்ஸ். 125 ஆண்​டுகள் பழமை வாய்ந்த இந்​நிறு​வனத்​தின் மூத்த குடும்ப உறுப்​பின​ரான உம்​மிடி எத்​திராஜ் வயது முதிர்வு மற்​றும் உடல்​நலக்​குறைவு காரண​மாக சென்​னை​யில் நேற்று காலமானார்.

அவருக்கு வயது 99. அவரது இறுதிச் சடங்​கு​கள் நேற்று நடை​பெற்​றன. உம்​மிடி எத்​திராஜ் மறைவுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணைத் தலை​வர் சி.பி.ராதாகிருஷ்​ணன், பிரதமர் நரேந்​திர மோடி, தமிழக ஆளுநர் ஆர்.வி.அர்​லேகர் ஆகியோர் இரங்​கல் தெரி​வித்​துள்​ளனர்.

குடியரசு துணைத் தலை​வர் சி.பி.ராதாகிருஷ்​ணன் எக்ஸ் தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில், “இந்​திய நாகரீக பாரம்​பரியத்​தின் புனித அடை​யாளமாக திகழும் செங்​கோலை உரு​வாக்​கிய உம்​மிடி எத்​திராஜ் என்​றும் நன்​றியோடும் மரியாதையோடும் நினைவு​கூரப்​படுவார்” என குறிப்​பிட்​டுள்​ளார்.

பிரதமர் மோடி வெளி​யிட்ட பதி​வில், “நாட்​டின் முதல் பிரதமர் நேரு​விடம் ஒப்​படைக்​கப்​பட்ட வரலாற்று சிறப்பு வாய்ந்த செங்​கோலை வடிவ​மைத்த நகை கலைஞர் உம்​மிடி எத்​திராஜ் என்​றும் நினைவு​கூரப்​படுவார்.

புதிய நாடாளு​மன்ற கட்​டிடத்​தில் அந்த செங்​கோலை நிறு​வும் தினத்​தில் அவரை நேரில் சந்​திக்​கும் பாக்​கியம் பெற்​றேன். நம் நாட்​டுக்​கும் கலாசா​ரத்​துக்​கும் அவர் செய்த பணிக்​காக அவருக்கு நன்றி தெரி​வித்​தேன். அவரது குடும்​பத்​தினருக்கு ஆழ்ந்த இரங்​கலை தெரி​வித்​துக் கொள்​கிறேன்” என கூறியுள்​ளார்.

கடந்த 1947-ல் இந்தியா சுதந்​திரம் அடைந்​தபோது ஆங்​கிலேயர்​களிட​மிருந்து இந்​தி​யா​வுக்கு அதி​காரம் கைமாறு​வதைக் குறிக்​கும் வகை​யில் நாட்​டின் முதல் பிரதமர் நேரு​விடம் தங்​கம் முலாம் பூசப்​பட்ட செங்​கோல் ஒப்​படைக்​கப்​பட்​டது.

வரலாற்​றுச் சிறப்​புமிக்க அந்த செங்​கோலை வடிவ​மைத்​தவர் உம்​மிடி எத்​திராஜ் என்​பது குறிப்பிடத்தக்​கது. 2023-ம் ஆண்டு இந்த செங்​கோல்புதிதாக கட்​டப்​பட்ட நாடாளு​மன்ற கட்​டிடத்​தில் நிறு​வப்​பட்​டபோது பிரதமர், உம்​மிடி எத்திராஜை நேரில் அழைத்து கவுரவித்தார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT