இந்தியா

முர்ஷிதாபாத்தின் நவோடா பகுதியில் வன்முறை

செய்திப்பிரிவு

கொல்கத்தா: முர்ஷிதாபாத்தின் நவோடா பகுதியில் நேற்று முன்தினம் இரவு வன்முறைச் சம்பவம் நடந்தது தெரியவந்துள்ளது.

வாக்குச்சாவடி அமைக்கப் பட்டிருந்த ஷிவ் நகர் பள்ளி மீது நாட்டு வெடிகுண்டுகளை மர்ம நபர்கள் வீசினர். இதில் ஒரு பெண் காயமடைந்தனர். இந்த சம்பவத்தின்போது அருகே திரிணமூல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சஹினா மும்தாஜ் கான் இருந்தார். இந்தத் தாக்குதலில் அவர் காயமின்றி தப்பினார். இதையடுத்து அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்று தலைமைத் தேர்தல் அதிகாரி மனோஜ் அகர்வால் தெரிவித்தார்.

கூச்பெஹாரின்சிதால் குச்சி பகுதியில், பாஜகவின் விவசாயப் பிரிவுத் தலைவர்ஒருவர் தாக்கப்பட்ட சம்பவமும் நேற்று முன்தினம் நடந்துள்ளது.

SCROLL FOR NEXT