இந்தியா

மணிப்பூரில் மீண்டும் வன்முறை: நாகா சமூகத்தினர் 4 பேர் படுகொலை

செய்திப்பிரிவு

இம்பால்: மணிப்பூரில் நடந்த தாக்குதலில், நாகா சமூகத்தைச் சேர்ந்த 4 பேர் கொல்லப்பட்டனர். மணிப்பூரில் கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினருக்கும், பழங்குடியினத்தைச் சேர்ந்த குகி சமூகத்தினருக்கும் இடையே இன மோதல் வெடித்தது. அதுமுதல் மாநிலம் தொடர்ந்து வன்முறையைச் சந்தித்து வருகிறது. அங்கு இதுவரை 370 பேர் உயிரிழந்துள்ளனர். 66 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

இந்நிலையில், உக்ருல் மாவட்டத்தில் நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில் நாகா சமூகத்தைச் சேர்ந்த 4 பேர் கொல்லப்பட்டனர். அவர்கள் இம்பால் நோக்கி வாகனங்களில் சென்று கொண்டிருந்த போது, தேசிய நெடுஞ்சாலையில் ஆயுதம் ஏந்திய கும்பல் வழிமறித்து் தாக்கியதில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT