இந்தியா

தற்சார்பு, தயார்நிலை, கூட்டு முயற்சியை உள்ளடக்கிய ‘வாயு' தொலைநோக்கு பார்வையுடன் செயல்படுவோம்: விமானப் படை தளபதி அசுதோஷ் தீட்சித் தகவல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்​திய விமானப்​படை ‘வாயு’ என்​கிற தொலைநோக்குப் பார்​வை​யின் கீழ் செயல்​படும் என புதிய விமானப்​படை தளபதி அசுதோஷ் தீட்சித் தெரி​வித்​தார்.

இந்​திய விமானப்​படை​யின் புதிய தளப​தி​யாக அசுதோஷ் தீட்​சித் நேற்று முன்​தினம் பதவி​யேற்​றார். இதையடுத்து, டெல்​லி​யில் உள்ள விமானப்​படை தளத்​தில் நேற்று அவருக்கு அணிவகுப்பு மரியாதை வழங்​கப்​பட்​டது. பின்​னர், விழா​வில் அவர் பேசியதாவது: எனது தலை​மையில், இந்​திய விமானப்​படை ‘வாயு’ (VAYU) தொலைநோக்​குப் பார்​வை​யின் கீழ் செயல்​படும். ‘V’ என்​பது விழிப்​புணர்வு மற்​றும் தயார்​நிலை​யைக் குறிக்​கிறது.

ஒவ்​வொரு படைப்​பி​ரிவும், ஒவ்​வொரு ரேடாரும், வான் பாதுகாப்புப் பிரிவும், ஒவ்​வொரு விமானப்​படை வீரருடன் சேர்ந்து, ஒரு நொடிப் பொழுதில் பதிலடி கொடுக்​கத் தயாராக இருக்க வேண்​டும். ‘A’ என்​பது ஆத்ம நிர்​பரை (தற்சார்பு) குறிக்​கிறது. நாங்கள் இந்​தி​யத் தயாரிப்​பு​களை கொண்டே போரிடுவோம். ‘Y’ என்​பது யுக்தி அல்​லது புத்​திசாலித்​தனத்​தைக் குறிக்​கிறது. உடனடிப் பராமரிப்பு, படைப் பாது​காப்பு, மீள்​திறன், விண்​வெளியைப் பயன்​படுத்​து​தல் ஆகிய அனைத்​துத் துறைகளும் தொடர்ந்து கண்​காணிக்​கப்​பட்டு மேம்​படுத்​தப்​படும்.

‘U’ என்​பது ஒற்​றுமையைக் குறிக்​கிறது. நமது ராணுவம், கடற்படை மற்​றும் தேசிய முகமை​களு​டன் இணைந்து நாம் ஒன்றாகத் திட்​ட​மிட்​டுப் போராடுவோம். புதிய தொழில்நுட்பங்களும் அமைப்​பு​களும் போரின் தன்​மையை மாற்றி வரு​கின்​றன. இந்​திய விமானப்​படை அடுத்த பத்தாண்டுகளில் நாட்​டின் தேவை​களைப் பூர்த்தி செய்​யும் வகையில் தன்​னைத் தகவ​மைத்​துக் கொள்ள வேண்​டும். இவ்வாறு அவர் பேசினார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT