இந்தியா

சுதந்திர தின விழாவில் முதன்முறையாக ஒலித்த ‘வந்தே மாதரம்’ பாடல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: நாட்​டின் 80-வது சுதந்​திர தின விழாவை முன்​னிட்​டு, டெல்லி செங்​கோட்​டை​யில் பிரதமர் நரேந்​திர மோடி தேசி​யக் கொடியை ஏற்​றி​வைத்த வரலாற்​றுச் சிறப்​புமிக்க நிகழ்​வில், தேசி​யப் பாடலான ‘வந்தே மாதரம்’ முதன்​முறை​யாக முழு​மை​யாக இசைக்​கப்​பட்​டது.

பிரதமர் நரேந்​திர மோடி தேசி​யக் கொடியை ஏற்​றி​வைத்​த​போது, 21 குண்​டு​கள் முழங்க மரி​யாதை செலுத்​தப்​பட்​டது. அதே வேளை​யில், இந்​திய விமானப் படை​யின் இரண்டு எம்.ஐ-17 ரக ஹெலி​காப்​டர்​கள் மலர் தூவ, ஒன்​றில் தேசி​யக் கொடி​யும் மற்​றொன்​றில் ‘வந்தே மாதரம்’ பொறிக்​கப்​பட்ட கொடி​யும் கம்​பீர​மாகப் பறக்​க​விடப்​பட்​டன.

கொடியேற்​றத்​தைத் தொடர்ந்து ராணுவ இசைக்​குழு​வினர் ‘வந்தே மாதரம்’ பாடலை முழு​மை​யாக இசைக்க, அதனைத் தொடர்ந்து தேசிய கீத​மான ‘ஜன கண மன’ இசைக்​கப்​பட்​டது. 150 ஆண்​டு​கால வரலாற்​றுச் சிறப்​புமிக்க ‘வந்தே மாதரம்’ பாடல், சுதந்​திரத்​துக்​குப் பிறகு செங்​கோட்டை விழா​வில் இசைக்​கப்​பட்​டது இதுவே முதன்​முறை எனப் பிரதமர் மோடி தனது உரை​யில் குறிப்​பிட்​டார்.

சுதந்​திரப் போராட்​டக் காலத்​தில் சுதேசி இயக்​கத்​தின் பேரெழுச்​சிப் பாடலாக விளங்​கிய வந்தே மாதரத்​துக்​கு, தேசிய கீதத்​துக்கு இணை​யான சட்​டப் பாது​காப்பை வழங்​கும் ‘தேசிய கவுரவ அவம​திப்பு தடுப்பு (திருத்த) மசோதா 2026’ நாடளு​மன்​றத்​தில் நிறைவேற்​றப்​பட்​டது. இதற்கு குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு சமீபத்​தில் ஒப்​புதல் அளித்​தார். இச்​சட்​டத் திருத்​தத்​தின்​படி, வந்தே மாதரம் பாடலைத் தடுப்​பதோ அல்​லது அவம​திப்​பதோ சிறை தண்​டனை மற்​றும் அபராதம் விதிக்​கக்​கூடிய குற்​ற​மாகும்.

முன்​ன​தாக, பங்​கிம் சந்​திர சட்​டர்​ஜி​யால் இயற்​றப்​பட்டு ‘ஆனந்​தமத்’ நாவலில் இடம்​பெற்ற இப்​பாடல், 1896 கொல்​கத்தா காங்​கிரஸ் மா​நாட்​டில் ரவீந்​திர​நாத் தாகூ​ரால் முதன்​முறை​யாகப்​ பாடப்​பட்​டது குறிப்​பிடத்​தக்​கது.

SCROLL FOR NEXT