டேராடூன்: பிரதமர் நரேந்திர மோடி பொதுவாழ்வில் 25 ஆண்டுகளை நிறைவு செய்ததை முன்னிட்டு, உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி நேற்று முன்தினம் உத்தரகாசியில் உள்ள பழமையான ஸ்ரீகாசி விஸ்வநாதர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தினார்.
பிரதமர் நரேந்திர மோடியின் நல்வாழ்வு, நீண்ட ஆயுள் மற்றும் தொடர் வெற்றிக்காக விஸ்வநாதரிடம் முதல்வர் தாமி பிரார்த்தனை செய்தார். பின்னர் அவர் கூறுகையில், “பிரதமர் மோடியின் 25 ஆண்டுகால பொதுவாழ்வு என்பது தேசப் பணி, மக்கள் நலன் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கான அர்ப்பணிப்புடன் கூடியது. பிரதமர் தனது பொதுவாழ்வுக் காலத்தில், நாட்டுக்கு புதிய திசை மற்றும் புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் பணியாற்றியுள்ளார்.
பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், இந்தியா வளர்ந்த நாடாக மாறும் இலக்கை நோக்கி தொடர்ந்து முன்னேறிச் செல்லும். பிரதமரின் நீண்ட மற்றும் வெற்றிகரமான பொது வாழ்வுக்கான தேவபூமியான உத்தராகண்டின் புனித பூமியிலிருந்து விஸ்வநாதரின் ஆசீர்வாதத்தை பெறுவது எனக்குக் கிடைத்த பெரும் பாக்கியம்” என்றார்.