இந்தியா

யுபிஐ வணிக பரிவர்த்தனை கட்டண வசூல் தள்ளிவைப்பு

தீபாவளிக்​குப் பிறகு அமலுக்கு வரும் என அறிவிப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: யுபிஐ வணிக பரிவர்த்​தனைக்​கான கட்டண வசூல் நடை​முறை தள்​ளிவைக்​கப்​பட்டு உள்​ளது. கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்​டில் இந்​தி​யா​வில் யுபிஐ டிஜிட்​டல் பணப் பரிவர்த்​தனை அறி​முகம் செய்​யப்​பட்​டது. இச்சேவையை நாடு முழு​வதும் 55.5 கோடி பேர் பயன்​படுத்தி வரு​கின்​றனர். தற்​போது கூகுள் பே, போன் பே, பேடிஎம், பீம், அமே​சான் பே உள்​ளிட்ட யுபிஐ பணப் பரிவர்த்​தனை​களுக்கு கட்​ட​ணம் இல்​லை.

இதனிடையே கடந்தமாதம் 14-ம் தேதி தேசிய பணப் பரிவர்த்தனை கழகம் (என்​பிசிஐ), ரூ.2,000-க்கு மேற்​பட்ட வணி​கம் சார்ந்த யுபிஐ பரிவர்த்​தனை​களுக்கு 0.4 சதவீத கட்​ட​ணம் வசூலிக்கப்​படும் என்று அறிவித்தது. இதன்​படி ரூ.2,000 வரையிலான வணிக யுபிஐ பணப் பரிவர்த்​தனைக்கு கட்​ட​ணம் கிடை​யாது. அதற்கு மேல் ரூ.3,000 வரை ரூ.12, ரூ.50,000 வரை ரூ.200, ரூ.75,000-க்கு மேல் ரூ.300 கட்​ட​ணத்தை வணி​கர்​கள் செலுத்த வேண்​டும்.

இதில் சிறு வணி​கர்​களுக்கு மட்​டும் சலுகை வழங்​கப்​படும். மாதத்துக்கு ரூ.1 லட்​சம் வரை யுபிஐ பரிவர்த்​தனை மேற்கொள்ளும் வணி​கர்​கள் எவ்​வித கட்​ட​ண​மும் செலுத்த தேவை​யில்லை என்று என்​பிசிஐ விளக்​கம் அளித்​தது. நாடு முழுவதும் அக்​டோபர் 15-ம் தேதி முதல் யுபிஐ வணிக பரிவர்த்​தனைக்​கான கட்டண வசூல் நடை​முறை அமலுக்கு வரும் என்று அறிவிக்​கப்​பட்​டிருந்​தது. இதற்கு வணி​கர்​கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரு​கின்​றனர்.

இந்த சூழலில் தேசிய பணப் பரிவர்த்​தனை கழகம் சமூக வலைதளத்​தில் நேற்று வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: யுபிஐ உயர்​நிலைக் குழு​வின் ஆலோ​சனைக் கூட்​டம் மும்​பை​யில் செவ்​வாய்க்​கிழமை நடை​பெற்​றது. வரும் பண்​டிகை காலத்தை முன்​னிட்டு யுபிஐ வணிக கட்டண நடை​முறையை தள்​ளிவைக்க கூட்​டத்​தில் ஒரு​மன​தாக முடிவு செய்​யப்​பட்​டது. தீபாவளி பண்டிகைக்கு பிறகு வணிக யுபிஐ கட்டண வசூல் நடை​முறை அமலுக்கு வரும். இதுதொடர்​பான தேதி பின்​னர் வெளியிடப்படும். இவ்​வாறு தேசிய பணப் பரிவர்த்​தனை கழகம் தெரி​வித்​துள்​ளது.

இதுகுறித்து மத்​திய நிதித்​துறை வட்​டாரங்​கள் கூறிய​தாவது: யுபிஐ பணப் பரிவர்த்​தனை​களை இலவச​மாக மேற்​கொள்ள கடந்த 4 ஆண்​டு​களில் மட்​டும் மத்​திய அரசு ரூ.8,276 கோடியை செலவு செய்​துள்​ளது. இதன்​மூலம் டிஜிட்​டல் பணப் பரிவர்த்​தனை ஊக்​குவிக்​கப்​பட்​டது. தற்​போது 55.5 கோடி பேர் யுபிஐ பணப் பரிவர்த்​தனையை மேற்​கொள்​கின்​றனர்.

தசரா, நவராத்​திரி, தீபாவளி உள்​ளிட்ட பண்​டிகைகள் வரு​வ​தால் கட்டண வசூல் நடை​முறையை தள்ளி வைக்க வர்த்​தக, தொழில் சேம்​பர் கோரிக்கை விடுத்​தது. இதையேற்று கட்​டண வசூல் நடைமுறை தள்ளி வைக்​கப்​பட்டு உள்​ளது. இவ்​வாறு மத்​திய நிதியமைச்​சக வட்​டாரங்​கள்​ தெரி​வித்​துள்​ளன.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT